திருமணம்... ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் மாற்றங்களைக் கொண்டுவருமா? ஆணுக்கு ஏதுமில்லையா...! ஏன் இல்லை? இங்கு நம் ஹரிசரண் வாழ்க்கையில் லக்ஷ்மிபிரியாவுடனான அவனுடைய திருமணம் எனென்ன மாற்றங்களை கொண்டு வருகிறது, ஹரியின் இதயத்தை பிரியா திருடினாளா... இல்லை, இவள் பிரியமுடன் ஹரியிடம் சரணடைந்தாளா... என்பதை கலகலப்புடன் “இதயத்தை திருடாதே!” என்ற இந்த கதையில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
ராஜேஸ்வரி சிவகுமார் என்ற தன் சொந்த பெயரிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் கதைகளை எழுதி வருகிறார். இவரின் இந்த சில ஆண்டு எழுத்து பயணத்தில் ஐந்து நெடுங்கதைகளும், ஒரு குறுநாவலும், மூன்று சிறு கதைகளும் வெளி வந்திருக்கின்றது.இதில் நான்கு நெடுங்கதைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது.
இவரின் கதைகளில் கையாளப்படும் பிரச்சனைகளும், பாத்திரங்களும் மி்கவும் சாதாரணமானவைகள். நாம் அன்றாடம் சந்திக்கும் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் கொண்டே இவரின் கதைகள் புனையப்பட்டிருக்கும். இவர் தற்போது நம் புஸ்தகாவில் புதிதாக இணையவுள்ளார். இவரின் படைப்புகளை பற்றிய நிறை குறைகளை குறிப்பிட விரும்பினால் rasi76997@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துக் கொள்ளவும்.
Rent Now