என் இனிய வாசகப் பெருமக்களே! இதற்குமுன் - திருத்தலங்கள் வரலாரும் மகிமையும், கர்நாடக மாநிலக் கலைக்கோவில்கள், கண்கவரும் கலைக்கோவிகள் ஆகிய எனது மூன்று நூல்களை கங்கை பதிப்பகம் வெளியிட்டு இரண்டு பதிப்புகளைக் கண்டன. அதில் முதல் நூலான திருத்தலங்கள் வரலாறும் மகிமையும் என்கிற நூல் தமிழ் எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளையின் பரிசை 2005-ம் ஆண்டில் பெற்றது. இப்போது திருக்கோவிகள் பற்றிய "இந்தியா - அமெரிக்கக் கோயில்கள்" என்கிற நான்காவது நூலை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன். இந்த நூலில் வட அமெரிக்காவில் சிக்காகோ நகரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோவில், ஸ்ரீராமர் திருக்கோவில், அதே வளாகத்தில் எழுப்பப்பட்ட ஸ்வாமி விவேகான்ந்தர் நினைவு மண்டபம், மினசோட்டா மாப்பிள்குரோவ் எனுமிடத்தில் எழுப்பப்பட்ட மிகப்பெரிய இந்து திருக்கோவில் பற்றி "ஒரே கூரையின் கீழ் 21 திருக்கொவில்கள் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. உலகம் முழுவதும் BAPS இயக்கத்தின்மூலம் பல கலைக்கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதன் தலைமையகம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருக்கிறது. இங்கிலாந்து, புது தில்லி ஆகிய இரண்டு இடங்களிலும் எழுப்பப்பட்ட் மிகப்பெரிய கலைக்கோவிகள். இவர்கள் மேலும் நியூயார்க், எடிஸன், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி. சிக்காகோ ஆகிய இடங்களில் திருக்கோவில்கள் எழுப்பியுள்ளனர். சிக்காகோவில் எழுப்பப் பட்டுள்ள திருக்கோவில் பற்றிய கட்டுரை இந்தத் தொகுப்பில் இடம்பெறுவதுடன், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ ஆச்சார்ய பிரபு பாதா அவர்களுக்கு அவருடைய பக்தர்கள் இணைந்து வெர்ஜுனியாவில் ஒரு தங்க அரண்மனையினை எழுப்பியிருக்கிறார்கள். மனதைப் பறிகொடுக்கும் அந்த மாளிகை பற்றிய அருமையான கட்டுரையும் இடம்பெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் ராமச்சந்திரந்திரபுரத்தில் நூற்றுக்கணக்கான் பசுக்களை வைத்துப் பராமரிக்கும் "கோசாலை" ஒன்று இருக்கிறது. அதைப் ப்ற்றிய கட்டுரையுடன் பகவான் ஸ்ரீசத்யசாயிபாபா அவர்களால் பெங்களூரில் எழுப்பப்பட்டுள்ள இலவச இதயநோய் மருத்துவமனை என்பது மக்கள் தொண்டு என்பதுடன் மஹேசன் தொண்டு என்பதால் கல்விக் கண்களைத் திறக்கும் சித்தகங்கா குருகுலம் பற்றிய கட்டுரையும் இடம்பெறுகிறது. பாரதம் முழுவதும் ஏராளமான இந்துக் கோவில்கள் இருந்தாலும், இங்கு நாத்திகவாதமும் காணப்படுகிறது. ஆனாலும் அமெரிக்கா போன்ற கிறிஸ்தவ மண்ணில் எழுப்பப்பட்ட திருக்கோவில்களில்தான் உண்மையான இறைவழிபாட்டையும், பக்தியையும் காணமுடிகிறது என்பது வெறும் பேச்சில்லை நிதர்சனமான உண்மையும்கூட. அமெரிக்கா மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா நாடுகளில் ஒரு இடத்தில் சுமார் நூறு இந்துக் குடும்பங்கள் இருந்தாலும் அவர்களுக்கென் ஒரு திருக்கோவில் எழுப்ப வேண்டும் என்கிற தணியாத ஆசையின் விளைவுதான் இந்தக் கோவில்கள். சைவ, வைஷ்ணவ வேறுபாடுகள் இல்லாமல் ஒரே கூரையில் இருபத்தி ஒன்று திருக்கோவிகளை எழுப்பியுள்ளார்கள் எனும் கட்டுரை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். வழக்கம்போல எனது படைப்புகளுக்கும், நூல்களுக்கும் வரவேற்பு நல்கும் வாசகப்பெருமக்கள் இந்த நூலுக்கும் நல்குவார்கள் என்று நம்புகிறேன். இந்த நூலுக்கு வடிவம் கொடுத்து வெளிக்கொண்டு வந்த நண்பர் தீபம் திருமலை அவர்கட்கும், இதை அழகுற அச்சிட்டு வெளியிட்ட பொன்மணி புத்தக நிலையத்தினருக்கும், ஊழியர்களுக்கும், எனது கட்டுரைகளை வெளியிட்டு என்னை ஆதரித்த ஓம்சக்தி, விஜயபாரதம், கலைமகள், கோபுர தரிசனம் ஆகிய இதழ்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். மேலும், இந்த தொகுப்பிற்குத் தனது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி முன்னுரை வழங்கிய மதிப்பிற்குரிய திரு.கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனுக்கு எனது உளங்கனிந்து நன்றிகள். -- ஜெயாவெங்கட்ராமன்.
"Jeya Venkatraman" has written many books about temples in India and America. He has translated a famous Kannada book-"Aavarana", written by S.L.Bhyrappa.
Rent Now