Home / eBooks / Indrum Theriyavillai Natchathirangal!
Indrum Theriyavillai Natchathirangal! eBook Online

Indrum Theriyavillai Natchathirangal! (இன்றும் தெரியவில்லை நட்சத்திரங்கள்!)

About Indrum Theriyavillai Natchathirangal! :

தன் வாழ்க்கையின் முற்பகுதியில் நிகழ்ந்து விட்ட ஒரு காதல் சோகத்தால், காதலையும், காதலிப்பவர்களை வெறுக்கிறார் தாமோதரன். அதன் காரணமாய், கம்ப்யூட்டர் வகுப்பிற்குச் சென்று வரும் தன் மகள் சித்ராவைக் கண் கொத்திப் பாம்பு போல் கவனிக்கின்றார்.

எதேச்சையாக நிகழும் சில சம்பவங்கள் அவரது சந்தேகத்தை அதிகரிக்கும் விதத்தில் நடந்தேறி விட, மகளைத் திட்டித் தீர்க்கிறார். அவள், “நீங்க சொல்லும் பையன் எப்படி இருப்பான் என்றே எனக்குத் தெரியாது...! அப்படியெல்லாம் எதுவுமில்லை” என்று கதறியும் நம்ப மறுக்கிறார்.

ஒரு நாள் மார்க்கெட் சென்ற தாமோதரன் ரத்த அழுத்தம் காரணமாய் மயங்கி விழ, அவரை ஒரு இளைஞன் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறான். அவன்தான் தந்தையின் சந்தேகத்தில் இருப்பவன் என்பது தெரியாமல், அவனுக்கு சித்ராவும், அவள் தாயாரும் நன்றி சொல்கின்றனர்.

தன்னைக் காப்பாற்றியவன் அந்த இளைஞன்தான் என்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் மனம் மாறினாரா...? இல்லை அதுவும் ஒரு நாடகம் என்று குதித்தாரா?

இளைஞர்களையும், இளைய சமுதாயத்தினரையும் பொறுப்பற்றவர்கள், என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் சில பெரியவர்களுக்கு சின்னச் சின்ன சம்பவங்களை மூலம் அறிவுரை கூறியிருக்கிறார் நாவலாசிரியர்.

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books