Home / eBooks / Innoru Pattampoochi
Innoru Pattampoochi eBook Online

Innoru Pattampoochi (இன்னொரு பட்டாம்பூச்சி)

About Innoru Pattampoochi :

சென்ற நூற்றாண்டின் மத்தியில் பிரான்ஸ் நாட்டில், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மிகக் கொடூரமாக இருந்தன. ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்குத் தீவாந்தர சிட்சை தந்து, அட்லாண்டிக் சமுத்திரத்தின் கோடியில் இருந்த ஃபிரெஞ்சு கயானாவுக்கு அனுப்பி வைத்து சித்திரவதை செய்தார்கள். திருட்டுத்தனமாகப் படகுகள் தயாரித்துத் தப்ப முயன்ற அவர்கள் கொல்லப்பட்டார்கள். அல்லது இன்னல் பலபட்டு இறந்தார்கள்.ஹென்றி ஷாரியர் என்றகைதி மட்டும் பதினாறு முறை அவ்வாறு முயன்று சுதந்தர புருஷனாக ஆனான். பதின்மூன்றாண்டுக் காலம் அவன் செய்த வீரதீரச் செயல்கள், அவனுடைய சுயசரிதையாக வெளிவந்தது. ‘பட்டாம்பூச்சி’ என்ற அந்தக் காவியம் உலக இலக்கியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ஹென்றி ஷாரியரைப் போலவே தீவாந்தர சிட்சையிலிருந்து தப்ப முயற்சி செய்த பல கைதிகள், அவனைப் போலவே தங்கள் அனுபவங்களை எழுதினார்கள். ஆனால் அவை புகழ் பெறவில்லை. இருப்பினும் ஃபெலிக்ஸ் மிலானி என்ற கைதி எழுதிய CONVICT என்ற சுயசரிதம். கிட்டத்தட்டப் பட்டாம்பூச்சியின் புகழை எட்டிப் பிடித்தது. அதைச் சற்றுச் சுருக்கமாக மொழிபெயர்த்து எழுதுமாறு அமரர் எஸ்.ஏ.பி. என்னைப் பணித்தார்கள். நாற்பது வாரம் குமுதத்தில் அது வெளிவந்தது.

மிலானியின் அனுபவங்கள் உள்ளத்தைத் தொடும் உருக்கம் கொண்டவை. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத உண்மைக் கதை.

ரா.கி.ரங்கராஜன்

About Ra. Ki. Rangarajan :

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Rent Now
Write A Review

Same Author Books