தொழில்கள் வெவ்வேறு பட்டவை. தொழில் செய்வதற்குப் படித்துப் பட்டம்பெற வேண்டும் என்பதில்லை. வணிகம் செய்வற்கு நேர்மை, கடமை, கண்ணியம். கட்டுப்பாடு, சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியத் திறமை, நேர்மறையான சிந்தனை, மேலும் சந்தைபற்றி அறிந்து புதுப் புது பொருட்களையும் சேவைகளையும், மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆர்வம், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வு, தொழில்நுட்பம் பற்றிய - போன்றவை முக்கியம், இத்துடன் மக்களோடு நல்ல தொடர்புத் திறமை அவசியம்.
இந்தக் கதை கொத்தில் உள்ள 20 கதைகள் யாவும் வணிகம் சார்ந்தவை. வேறுபட்ட தொழில்கள் சார்ந்தவை.
சில கதைகள், நான் அறிந்த கதைகளானாலும் கற்பனையும் நகைச்சுவையும் கலந்தவை. பிரித்தானியாவில் மார்க்கெட்டிங் டிப்ளோமா (CIM-UK) படித்த எனக்குத் தமிழில் சிறுகதைகள் வடிவத்தில் வணிகம் பற்றி வியாபாரிகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று புதுமையாக ஏதாவதொன்றை, இலக்கிய வடிவில் செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஒரு நாள் உதயமாயிற்று. அதன் விளைவே இந்த 20 கதைகள் அடங்கிய வணிகக் கதைக் கொத்து என்ற புதிய இலக்கியப் பொருள். இந்தப் பொருளை ஆர்வமாக வாசியுங்கள், சிந்தியுங்கள், சிரியுங்கள், பகிருங்கள். தேவைப்படின் அதில் உள்ள கருக்களை உங்கள் வியாபாரத்துக்குப் பாவியுங்கள்.
பொன் குலேந்திரன் இலங்கை யாழ்ப்பாண இராட்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St Johns College)) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைகத்தில் பௌதிகத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று, அதன் பின் தொலை தொடர்பபில் பொறியியல் பட்டம் பெற்று, சந்தை படுத்தலில் (Chartered Institute of Marketing) பிரித்தானியாவில் பட்டம் பெற்றவர்.
பத்து வயதில் சிறு கதைகள் எழுதத் தொடங்கி, அதன் பின் பல கலாச்சர மக்களோடு பழகியதால் இவரது கதைகள் பல பரிமாணத்தில் உருவாக்கப் பட்டவை. அறிவியல் கதைகளும் உருவகக் கதைகளும், மனித உரிமை மீறளோடு தொடர்புள்ள பல சிறுகதைகள் பொன், நல்லூரான். விஷ்வா ஆகிய புனை பெயர்களில் எழுதி வருகிறார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார்; ஆங்கலத்திலும் தமிழிலும் பல நூல்களும் மின் நூல்களும் வெளியிட்டுள்ளார். பல இணயத்தளங்களுக்கும் எழுதி வரும் இவர் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பீல் பகுதி தமிழ் முதியோர் சங்கத்தின் தலைவராக 4 வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
Rent Now