Home / eBooks / Isai Koyil
Isai Koyil eBook Online

Isai Koyil (இசைக்கோயில்)

About Isai Koyil :

திருச்சியில் பல வாத்தியங்கள் வாசிக்கத் தெரிந்த, ராஜாமணி ஒரு கர்நாடக வித்வான். சரியான மாதவருமானம் இல்லாத நிலையில், அவனை அவன் மாமியார் செல்லம்மாள் அவமானப்படுத்துகிறாள்.

அவன் மனைவி சிந்து, பிரசவத்தில் இறந்துவிடுகிறாள். அவன் குழந்தையும், செல்லம்மாவும் வேதனையில் இறந்து விடுகிறார்கள்.

அவனுக்கு ஒரே ஆறுதல், அவன் ரசிகை பானுமதி. அவள் சேதுசுந்தர் என்பவனைத் திருமணம் செய்துகொண்டு சென்னைக்குப் போகிறாள்.

ராஜாமணி சென்னைக்கு வந்து சபாக்களில் பாடுகிறான். பானுமதியைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இங்கு இசைக்கருவிகளை ரிப்பேர் செய்யும் கீதப்பிரியனையும், அவன் மகன் சந்துருவையும் சந்திக்கிறான்.

சந்துரு சிறு வயதிலேயே வயலின் வாசிக்கும் திறமையைப் பாராட்டி, அவனை வயலின் வித்வானாக்க ஆசைப்பட்டு, தன் கச்சேரிகளில் குடித்துவிட்டு கலாட்டா செய்யும், வயலின் வித்வான் குமரகுருவுக்குப் பதிலாக சிறுவன் சந்துருவை வயலின் மேதையாக்குகிறான்.

மைலாப்பூரில் ராஜாமணி, பல காலங்களுக்குப் பிறகு, அடையாளம் தெரியாத நிலையில் பானுமதியைச் சந்திக்கிறான்.

அவள் சென்னையை அடுத்த முடிச்சூருக்கு அவனைக் கூட்டிச்செல்கிறாள். அவள் புகுந்த வீட்டில் பட்ட துன்பங்களையும், அவள் தோழி கொடுத்த ஆதரவையும், அவள் தோழியைக் குடிவெறியில் கற்பழிக்க வந்த கணவனைக் கொன்று கொலைகாரி ஆக்கப்பட்டதையும், அவள் குழந்தையை அவள் அத்தை மகன் கீதப்பிரியனிடம் வளர்க்கச்சொல்லி சிறைக்குப்போய் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலையாகி வந்ததையும் கூறுகிறாள்.

பானுமதி கொலைகாரியாகி சிறைக்குப் போனதை மறைத்து, அவளை அவள் மகன், சிறுவன் சந்துருவுடன் சேர்த்து வைக்க ராஜாமணி நினைக்கிறான்.

இதற்கு கீதப்பிரியன் உதவி செய்கிறான். ராஜாமணியுடன் பானுமதிக்கு உள்ள நட்பை, அக்கம் பக்கம் தவறாகப் பேசுவதைக் கேட்ட சந்துரு, பானுமதியை வெறுக்கிறான்.

சந்துரு அவன் அப்பா யார் என்று தெரிந்தால் தான் அங்கு பானுமதியுடன் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறான்.

பானுமதி, ராஜாமணி தான் உன் அப்பா என்று கூறுகிறாள். அதற்கு அடையாளமாக ராஜாமணியுடன் திருமணமானது போன்ற புகைப்படங்களை மார்ஃபிங் செய்து, அதைக் காட்டுகிறாள்.

ராஜாமணி ஒன்றும் பேசமுடியாமல் அவள் சொன்ன உறவை, மௌனமாக ஏற்றுக்கொள்கிறான். ஒரு அயோக்கியக் கணவனுடன் அர்த்தமில்லாத உறவுகளுடன் வாழ்வதை விட, ஒரு யோக்கியனுடன் அர்த்தத்துடன் வாழ்வது நிம்மதியானது என்று ராஜாமணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு பானுமதி அழுகிறாள்.

அவன் ரசிகை, ஒரு தாய் அவனுக்கு மனையாவதையும், தன் சீடன் தனக்கு மகனாவதையும் ராஜாமணி ஏற்றுக்கொள்கிறான்.

About Karaikudi Narayanan :

ஊர்பெயரை தன்னுடன் இனைத்து ஊருக்கும் பெருமை சேர்த்தவர். திரையுலகின் ஜாம்பவான்களான திரு.பீம்சிங் அவர்களிடம் 1967 ல் திரு.ஜெமினிகணேசன், P.பானுமதிம்மா, நடித்த பட்டத்துராணி என்ற பட்த்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், திரு.ஜாவர் சீதாராமன் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்தவயர்.

திரு.A.C.திருலோகசந்தர் அவர்களால் 1971 ல் திரு.முத்துர்மன், K.R.விஜயா, பிரமீளா, சொந்தம் திரைப்படம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி நமக்கு சொந்தமானவர். 1977 அச்சாணி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். திரு.முத்துராமன், திருமதி.லட்சுமி, ஷோபா அறிமுகம்.

AVM ன் செல்லப்பிள்ளை... இன்று பேர் சொல்லும் பிள்ளை...

திரு.மேஜர் சுந்தர்ராஜன் திரு.சிவக்குமார் திரு.ஶ்ரீகாந்த் திரு.ரவிச்சந்திரன் திரு.விஜயகுமார் திருமதி.மஞ்சளா திருமதி.பிரமீளா ஆகியோருக்காக 28 மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என்று அனைத்து மொழிகளிலும் 29 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 9 படங்களை தயாரித்து, இயக்கியவர்.

இவரிடம் இருந்த உதவியாளர்கள் இயக்குநர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர்களாக, திரையுலகில் வெற்றி பெற்றவர்கள்... திரு.ராஜசேகர் திரு.இராமநாராயணன் திரு.M.A. காஜா, திரு.ராமராஜன் திரு.ரமேஷ்கண்ணா திரு.கஜேந்திரகுமார் திரு.எழுச்சூர் அரவிந்தன் ஆகியோர்.

தமிழக அரசின், கேரள அரசின், மாநில விருதுகளைப் பெற்றவர். மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றவர்.

இன்றும் SWAN ல் கதைகளை பதிவுசெய்து வருபவர். SWAN ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த சாதனையாளர், முன்னோடி, திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நல்ல மனிதர், மரியாதைக்குரிய திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நீண்ட ஆயூளுடன், நல்ல ஆரோக்யத்துடன், பல்லாண்டுகள் வாழ, குடும்பத்தில் பெரியவர்களை வணங்கிப் போற்றுவது போல், திரைக்குடும்பத்தில் இவரைப் போன்ற முன்னோடிகளை வணங்கிப் போற்றி பிராத்திப்போம்...

சி.ரங்கநாதன்.

Rent Now
Write A Review

Same Author Books