Home / eBooks / Isai Vazhiye Iraiyarul Petravargal
Isai Vazhiye Iraiyarul Petravargal eBook Online

Isai Vazhiye Iraiyarul Petravargal (இசை வழியே இறையருள் பெற்றவர்கள்)

About Isai Vazhiye Iraiyarul Petravargal :

"பக்தி மணம் இல்லாத இசை இயற்கையான மணம் இல்லாத மலரைப் போன்றது!" என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி. பக்தியைப் பரப்ப பல வழிகள் இருந்தும், இசையை முக்கியமான துணையாக மேற்கொண்டு, இறைவன் அருளை நாடிப் புறப்பட்டார்கள். பாரத நாட்டில் வாழ்ந்த பக்த சிரோன்மணிகள் பலர். தன்னை மறந்து பஜனையின் பேரின்பத்தில் திளைத்த ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு முதல், எளிமையாகக் காவேரிக்கரையில் அமர்ந்து கீர்த்தனைகள் பாடிய தியாகராஜ சுவாமிகள் வரை, அந்தப் பக்தர்கள் அனைவருக்கும் இறைவன் அருள் கிடைத்தது. அரச குலத்தில் பிறந்த மீராபாயிலிருந்து, மண்பாண்டம் செய்து விற்ற கோராகும்பர் வரையில், பக்தியில் திளைத்த பலரும் பரமனின் லீலைகளுக்கு ஆளாகிப் பெரும் பேறு பெற்றார்கள்.

நாட்டில் இன்று மொழி என்பது மக்களைப் பிரித்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தப் பக்தர்கள் பக்திமணம் கமழும் இசையின் மூலம் நாட்டு மக்களை இணைத்தார்கள். மீராபாயின் இந்தி பஜனை கீதங்களும், ஜயதேவரின் சம்ஸ்கிருதப் பாடல்களும், ஆண்டாளின் தீந்தமிழ்த் திருப்பாவையும், புரந்தரதாசரின் கன்னடக் கிருதிகளும், மொழியின் எல்லைகளைக் கடந்து அனைவரையும் ஈர்த்து ஒன்றுபடுத்தின.

மகாராஷ்டிர மொழியில் இராமாயணம் பாடினார் ஏகநாதர். இந்தி மொழியில் இராமாயணத்தைப் பாடல்களாக இயற்றினார் துளசிதாசர். பட்டாத்ரி பாகவதத்தைச் சமஸ்கிருதத்தில் பாடினார். பூந்தானம் அதையே மலையாள மொழியில் பாடினார். சிவபிரானின் பக்தராக இருந்து ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனைப் பாடல்களில் பாடிச் சைவ வைணவச் சமய ஒற்றுமைக்கு வழி வகுத்தார் மகான் வித்யாபதி. இறைவனின் அருள் பெருகும்போது பிரிவினைகளுக்கு இடம் ஏது?

குழந்தை நாமதேவனுக்காக நைவேத்யத்தை உண்ண வந்தான் வாசுதேவன். கண்ணனையே கைக்குழந்தையாக எடுத்துப்பாடி மகிழ்ந்தாள் கருமபாய். இறைவன் நண்பனாகவும், சேவகனாகவும், காவலனாகவும், காதலனாகவும் வந்து பக்தர்களுக்குக் கைகொடுத்த கதைகள் அநேகம்.

புண்ணிய பாரத பூமியில் பக்தி இசை மூலம் மக்களை ஒற்றுமைப்படுத்தவும், நல்வழிப்படுத்தவும் பாடுபட்ட பக்தர்களின் பாத மலர்களுக்கு இந்த எளிய நூலைக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் அவர்களுடைய நல்லாசி இந்த நாட்டின் பெருமையைக் காப்பாற்றட்டும்.

- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

About Lakshmi Subramaniam :

லட்சுமி சுப்பிரமணியம் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகளாகச் சிறுகதைகளும் நாவல்களும் எழுதி உள்ளார். இவர் சுமார் அறுநூறுக்கும் மேல் சிறுகதைகளும், ப நாவல்களும் வெளிவந்துள்ளன,. 'ஆனந்த விகடன்', 'கல்கி ' பத்திரிகைகளின் வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டிகளில் பரிசு பெற்றவர். 'துடிப்பின் எல்லை' என்ற இவருடைய நாவல் 'கலைமகள்' பரிசைப் பெற்றது. திரு. லா. ச, ராமாமிருதம், திரு. தி. ஜானகிராமன் இருவரையும் மானசீகக் குரு நாதராகக் கொண்டாடுபவர்.

படைப்பிலக்கியம் தவிர, மருத்துவம், தொழில் நுட்பம், சமயம், மனோதத்துவம், இசை ஆகிய துறைகளிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books