பெங்களூரைச் சேர்ந்த இவர், அடிப்படையில் எம்.பி.பி.எஸ், டாக்டர். பெங்களூர் நகரை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பரத்சந்திராவுக்கு, குடிசைப் பகுதி மக்களின் வாழ்க்கைச் சிக்கலை தீர்க்க மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி மனரீதியான சிகிச்சையும் தேவை என்பதை கண்டறிந்தார். ஆறேழு ஆண்டுகளுக்கு முன், இத்தகைய சிகிச்சையைத் தொடங்கிய பரத்சந்த்ராவுக்கு, எதிர் பார்த்ததற்கும் மேலாக வெற்றி கிடைக்கத் தொடங்கியது. அதன் பின் மனோரீதியாக சிகிச்சை அளிப்பதையே முழு நேரத் தொழிலாக மேற்கொள்ளத் தொடங்கி, 'வின்னர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். மனந் தளர்ந்திருந்த பல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் இவரிடம் உற்சாக டானிக் பெற்று உயர்வெய்தியிருக்கிறார்கள். அந்த டானிக்கின் மகிமையை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற நகரங்களிலும் துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நூற்றுக்கணக்கான பயிற்சிப் பட்டறைகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கும் பரத்சந்த்ராவுக்கு வயது அதிகமில்லை 42 தான்.
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Rent Now