திருமதி. ஹம்சா தனகோபால் அவர்கள் எழுதியுள்ள “சாதிகள் இல்லையடி பாப்பா’ எனும் புதினம், சாதிகளின் பிடியில் சிக்கி சிதைந்த இதயங்களை மையமாக வைத்து இப்புதினத்தை எழுதியிருக்கிறார் ஹம்சா தனகோபால். சமுதாயத்தில் சாதிகளினால் ஏற்படும் சீர்கேடுகள், இன்றைய ஆட்சியின் கொள்கை காரணமாக தகுதி இருந்தும் வேலை வாய்ப்புப் பெறமுடியாமல் தவிக்கும் படித்த இளைஞர்களின் உள்ளக் குமுறல், பணத்தாலும் அரசு பதவியாலும் அப்பாவி மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் கொடுமை, அதிகாரத்துக்கு அடிபணியும் நீதி…... ஆகிய இன்றைய நாட்டு நடப்பின் காரணமாக இந்நூலாசிரியை உள்மனதின் அடித்தளத்தில் எழுந்த வேதனையின் வெளிப்பாடே இப்புதினம்.
- V.G. சந்தோஷம்
மராத்தியை தாய் மொழியாக கொண்டிருந்தாலும் திருமதி ஹம்சா தனகோபால் தமிழை தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கிறார். எண்ணில் அடங்கா புதினங்களையும், சிறுகதை தொகுப்புக்களையும் படைத்துள்ள இவர் இரண்டு கவிதை தொகுப்புக்களுக்கும் உரியவர். இவருடைய புதினங்களை ஆய்வு செய்து பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளையும் பெண் சிசு கொலையை வன்மையாக கண்டித்தும் எழுதியுள்ளார்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே திருநங்கைகளுக்காக குரல் கொடுக்கும் விதமாய் "அன்று ஒரு நாள் " என்ற புதினத்தை படைத்துள்ளார். இந்த புதினத்திற்கான அணிந்துரையை அழகுப்படுத்தியவர் வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள்..
மத்திய அரசின் "பாஷா பாரதி சம்மான்" விருது, ரஷ்யா புஷ்கின் இலக்கிய விருது, தமிழக சிறந்த நூலாசிரியருக்கான விருது எனபற்பல விருது பெற்றுள்ள இவர் அண்மையில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான தமிழ் நாடு அரசின் "அம்மா இலக்கிய விருது - 2016" பெற்றது இவருக்கு தமிழ் இலக்கிய உலகில் ஒரு தனித்துவம் அளிக்கிறது.
நாற்பது ஆண்டுகளாய் தொடரும் இவரது எழுத்துப்பணி சமூக உயர்வுக்காக மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Rent Now Poornima Narayanaswamy
The storyline deals with the social evil of caste discrimination in a very subtle manner. The memorable words of the Mahakavi has been rightly titled for the story dealing with baseless fantaism