Home / eBooks / Kaadhal Brahma
Kaadhal Brahma eBook Online

Kaadhal Brahma (காதல் பிரம்மா)

About Kaadhal Brahma :

நாயகன் : பிரம்மா.

நாயகி : காயத்ரி.

காவல்த்துறை ஐபிஎஸ் அதிகாரியான பிரம்மாவுக்கு ஒரு விபத்தில் பழைய நினைவுகள் அனைத்தும் முழுதாக மறந்து போக, அதை தன் புத்தி சாதுர்யத்தால் அவன் அணுகும் விதம். தன்னைப்பற்றிய உண்மை நிலையை, தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட மறைக்கும் அவனது புத்திசாலித்தனம். பிரம்மாவைப் பார்க்கும், படிக்கும் எவராலும் நிச்சயம் பிரமிக்காமல் இருக்கவே முடியாது.

இவனைக் கொலை செய்ய முயலும் நாயகி. தன்னைக் கொல்லவரும் காயத்ரியை அவன் கண்டுகொண்டானா? காயத்ரியின் எண்ணம் ஈடேறியதா? அவனது நினைவுகள் திரும்பியதா?

அவனது பழைய நினைவுகள் போயிருக்கையில், வேலையில் சேர்ந்தவன் அதை மற்றவருக்குத் தெரியாமல் எப்படி மறைத்தான்? அவனிடம் கொடுக்கப்பட்ட கேஸ் களை எவ்வாறு முடித்து வைத்தான்?

அவனது நினைவு திரும்பிய பிறகு, தன்னைக் கொல்ல வந்தவளே தன் மனைவியாகி இருப்பதைப் பார்த்து என்ன முடிவெடுப்பான்?

அவனது பழைய நினைவுகள் இல்லாத பொழுது அவனைத் திருமணம் செய்து கொண்ட காயத்ரியின் நிலை என்னவானது? அவள் அவனைக் கொல்ல முயன்றதன் காரணம் என்ன? அனைத்தையும் அறிய, கதைக்குள் வாருங்கள்.

About Infaa Alocious :

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Sindhu

Very nice novel

  Sindhu

Very nice novel

  Prasanth

Good book

  Prasanth

Good book

  Berna

One of the best novels i read

  Selva

Nice novel

  Priyanka

The story of a sincere police officer who is solely dedicated to his profession but with angry eyes and rough braveness. . He admires the readers in each and every line of this novel. The way he loves and and care his soul Gayu is totally unexplainable. .. Brahma u r a lover boy as like a brave policeman. Infa akka this is one of ur the best epic novel. .. and I wish u with heart full of love and hugs..Readers please don't even take a chance to miss this epic. ....

  Kalaivani

Excellent novel. I like all her novels.

  Laxmi

Hii mam I'm big fan of ur novels I like u so much mam and then addictive ur novel mam thank u so much

  Artpearl

Super novel