என் கண்ணின் மணியான வாசகர்களுக்கு வணக்கம்!
என் அன்பு தந்தை திரு பொ.கணபதி அவர்களின் மறைவு என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. என்னால் தொடர்ந்து எழுத முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. மரணம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியது தான் என்றாலும் என்னால் தாங்கவே முடியவில்லை. மீள முடியாத வேதனையிலிருந்து என்னை மீண்டும் மீட்டெடுத்தது எனது எழுதுகோல் தான்.
காதல் முத்தம் தருவாயா? கதை வித்தியாசமான படைப்பு. இக்கால பெண்கள் பெற்றோரிடம் எதையுமே மறைக்கக்கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லாவிட்டால் இக்கதையின் நாயகி வண்ணக்கிளி மாதிரி தத்தளிக்க வேண்டியது தான்.
மரகதப் பொன் வீணையான தன் மனைவி வண்ணக்கிளியை சந்தேகம் கொண்டு புழுதியில் வீசிய முகிலன் மறுபடியும் காதல் இசையை மீட்டினானா?
வாசித்து பாருங்கள்
மகேஷ்வரன்.
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்