Home / eBooks / Kaadhal Pisase...
Kaadhal Pisase... eBook Online

Kaadhal Pisase... (Kaadhal Pisase)

About Kaadhal Pisase... :

சிந்துவும், அவள் எட்டு வயதுப்பெண் அனுபமாவும், ராஜியை ரெடிமேட் ஷாப்பில் சந்தித்தது முதல், நெருக்கமான தோழிகளாகிறார்கள்.

ராஜி அனுபமாவின் பிறந்தநாளுக்கு வருகிறாள்.

அப்போது தான் ராஜியைக் காதலித்துப் பொய்க்காரணங்களைச் சொல்லி, அவளைக் கைவிட்டுப்போன பிரபுராம் சிந்துவின் கணவர், அனுபமாவின் அப்பா என்று தெரிகிறது.

அவளை ஏமாற்றிய பிரபுராமை, சிந்துவின் தோழியாகவும், அனுபமாவின் ஆண்ட்டியாகவும், அடிக்கடி சந்தித்து அவனை நிம்மதி இல்லாமல் செய்கிறாள்.

உயிர்த்தோழியான ராஜியின் திருமணத்தைப் பற்றி, பிரபுராமிடம் சிந்து பேசுவாள். பிரபுராம் சமாளிப்பான்.

அனுபமா பெரியவளானாள். அவள் சடங்குகளை சிந்து, ராஜியைச் செய்யச்சொன்னாள்.

சிந்துவுக்கு வாங்கிய புடவை போல, ராஜிக்கும் சிந்து வாங்கித்தந்தாள். சிந்து புற்றுநோய்க்கு ஆளாகி, லண்டன் புறப்பட்டபோது, அவள் திரும்பி வரும்வரை, ராஜியை சிந்துவின் பங்களாவில் இருக்கச்சொன்னாள்.

அவள் திரும்பி வராவிட்டால், ராஜியை பிரபுராமின் மனைவியாகட்டும் என்று அவனிடம் தனியாகச் சொன்னாள்.

சிந்து லண்டனில் இருந்தபோது, ராஜி, பிரபுராமை முடிந்தவரை காதல் ஏமாற்றத்தைச் சொல்லி, காதல் பிசாசாகி, அவனை நிம்மதி இல்லாமல் செய்தாள்.

ராஜி பிரபுராமிடம் வேண்டுமென்றே நெருங்கிப் பழகுவதைப் பார்த்த வேலைக்காரர்களும், அனுபமாவும் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள்.

ராஜி மேல் அன்பு காட்டிய அனுபமா வெறுப்பைக் காட்டினாள்.

சிந்து லண்டனிலிருந்து வந்தாள். பிரபுராம், திருப்பதிக்குப் போவதாக பொய் சொல்லி, வேறு வழியில்லாமல் ராஜியின் தோழி சங்கீதாவின் அடுக்குமாடி வீட்டிற்குச் செல்கிறான்.

இந்த உண்மை சிந்துவின் டிரைவர் மூலம், அவள் அப்பா வாசுவுக்குத் தெரியவந்தது.

அவர் மூலம் சிந்துவுக்கு, ராஜியுடன் பிரபுராம் இருப்பது தெரிகிறது.

அடுக்குமாடி வீட்டிற்குச் சென்ற சிந்து, நேரடியாகப் பார்த்து, ராஜியின் நம்பிக்கைத் துரோகத்தைப் பார்த்து, திட்டுகிறாள்.

இப்போது ராஜியின் தோழி, சங்கீதா கொலை செய்யப்படுகிறாள்.

அந்தக் கொலைப்பழி பிரபுராம் மேல் விழுகிறது. அந்தக் கொலைப்பழியிலிருந்து, பிரபுராமை ராஜி காப்பாற்றி, விடுதலை செய்து, சிந்துவிடம் அவனை ஒப்படைத்து, விடை பெறுகிறாள்.

அல்லது..

அந்தக் கொலையிலிருந்து பிரபுராம் தப்பித்தானா?, ராஜி என்ன முடிவு செய்தாள்?, சிந்துவின் நிலை என்ன?, இது தான் காதல் பிசாசே யின் கதை.

About Karaikudi Narayanan :

ஊர்பெயரை தன்னுடன் இனைத்து ஊருக்கும் பெருமை சேர்த்தவர். திரையுலகின் ஜாம்பவான்களான திரு.பீம்சிங் அவர்களிடம் 1967 ல் திரு.ஜெமினிகணேசன், P.பானுமதிம்மா, நடித்த பட்டத்துராணி என்ற பட்த்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர், திரு.ஜாவர் சீதாராமன் அவர்களிடம் உதவி எழுத்தாளராக பணிபுரிந்தவயர்.

திரு.A.C.திருலோகசந்தர் அவர்களால் 1971 ல் திரு.முத்துர்மன், K.R.விஜயா, பிரமீளா, சொந்தம் திரைப்படம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகி நமக்கு சொந்தமானவர். 1977 அச்சாணி என்ற திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். திரு.முத்துராமன், திருமதி.லட்சுமி, ஷோபா அறிமுகம்.

AVM ன் செல்லப்பிள்ளை... இன்று பேர் சொல்லும் பிள்ளை...

திரு.மேஜர் சுந்தர்ராஜன் திரு.சிவக்குமார் திரு.ஶ்ரீகாந்த் திரு.ரவிச்சந்திரன் திரு.விஜயகுமார் திருமதி.மஞ்சளா திருமதி.பிரமீளா ஆகியோருக்காக 28 மேடை நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, என்று அனைத்து மொழிகளிலும் 29 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 9 படங்களை தயாரித்து, இயக்கியவர்.

இவரிடம் இருந்த உதவியாளர்கள் இயக்குநர்களாக, எழுத்தாளர்களாக, நடிகர்களாக, திரையுலகில் வெற்றி பெற்றவர்கள்... திரு.ராஜசேகர் திரு.இராமநாராயணன் திரு.M.A. காஜா, திரு.ராமராஜன் திரு.ரமேஷ்கண்ணா திரு.கஜேந்திரகுமார் திரு.எழுச்சூர் அரவிந்தன் ஆகியோர்.

தமிழக அரசின், கேரள அரசின், மாநில விருதுகளைப் பெற்றவர். மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றவர்.

இன்றும் SWAN ல் கதைகளை பதிவுசெய்து வருபவர். SWAN ல் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த சாதனையாளர், முன்னோடி, திரைப்பட எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், நல்ல மனிதர், மரியாதைக்குரிய திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நீண்ட ஆயூளுடன், நல்ல ஆரோக்யத்துடன், பல்லாண்டுகள் வாழ, குடும்பத்தில் பெரியவர்களை வணங்கிப் போற்றுவது போல், திரைக்குடும்பத்தில் இவரைப் போன்ற முன்னோடிகளை வணங்கிப் போற்றி பிராத்திப்போம்...

சி.ரங்கநாதன்.

Rent Now
Write A Review

Same Author Books