கடலிலிருந்து சிதறிய துளிகளானாலும் அதுவும் கடலின் ஒரு பகுதி தானே. கண்ணீர்த் துளிகளானாலும் மகத்துவம் மிகுந்ததல்லவா? மழைத்துளியை நான் எதனோடு ஒப்பிட முடியும். பெருவெடிப்பின் போது சிதறிய துளிகளில் ஒன்று தானே இந்தப்பூமி. சிறுசிறு சொட்டுக்களானாலும் நாள் முழுதும் காத்திருந்தால் பாத்திரம் நிரம்பிவிடாதா? ஒரு நாள் என்பது வினாடிகளின் சேர்க்கை தானே? காவியங்களெல்லாம் சிறுசிறு வரிகளால் கட்டமைக்கப்பட்டது தானே? சிறிய விதைக்குள் தானே அடங்கியுள்ளது விருட்சம். சிறிய அணுத்துளியிலிருந்து உருவானவர்கள் தானே நாம். இந்தக் கவித்துளிகளில் அநேகம் காதலைப் பற்றிப் பேசுகின்றன. வாசித்துப் பார்த்தால் சில முத்துக்களை உங்களால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?
ப்ரியமுடன், ப.மதியழகன்
திருவாரூர் மாவட்டம் – மன்னார்குடி எனும் நகரத்தைச் சேர்ந்தவர் ப.மதியழகன்.நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமா பெற்றவர்.கீற்று, வார்ப்பு, திண்ணை, உயிரோசை, பதிவுகள், மலைகள் ஆகிய இணைய இதழ்களிலும், நவீன விருட்சம், அம்ருதா, தாமரை,இனிய உதயம் ஆகிய இலக்கிய இதழ்களிலும், குங்குமம் போன்ற வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது.
முதல் கவிதை தொகுப்பு ‘தொலைந்து போன நிழலைத் தேடி’ 2008ல் வெளிவந்தது.இரண்டாவது கவிதை தொகுப்பு ‘சதுரங்கம்’ 2011ல் வெளிவந்தது.மூன்றாவது கவிதை தொகுப்பு ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ 2017ல் வெளிவந்தது. நான்காவது கவிதைகளும், கட்டுரைகளும் சேர்ந்த தொகுப்பாக துயர்மிகு வரிகள் எனும் தலைப்பில் 2017ல் வெளிவந்தது. இணைய இதழ்களில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளது.
தற்போது மன்னார்குடியில் தனியார் கணினி பயிற்சி மையத்தில் கணினி பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.
Rent Now