Home / eBooks / Kaadhale...! Kaadhale...!!
Kaadhale...! Kaadhale...!! eBook Online

Kaadhale...! Kaadhale...!! (காதலே...! காதலே...!!)

About Kaadhale...! Kaadhale...!! :

ஹீரோ பரத் ஒரு சிறந்த சமையல்கலை நிபுணன்.

பல்வேறு உணவுவிடுதிகளில் தன் சமையல்கலையைப் பிரதிபலித்தவனுக்கு, சமுதாயத்தில் பெரும்புள்ளி ஒருவரின் வாயிலாக, புகழ்பெற்ற வெளியூர் உணவு விடுதி[chain restaurant] ஒன்றில் மிக நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது.

அங்கேயே அவன் அமைத்துக்கொண்ட கலகலப்பான அபார்ட்மன்ட் வாழ்க்கை. குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் பலர் அவனது சமையல் கலைக்காகவே அவனிடம் நட்பு பாராட்ட, அவனை நெருங்கிப் பழகும் ஒருத்திக்கு மட்டும் வேறேதோ உள்நோக்கம்..! அந்த ஒருத்தி யார்? அவளால் பரத்தின் வாழ்க்கையில் நடந்த குழப்பங்கள் என்ன?

காதலோடு சேர்த்து சமூகத்தில் நடக்கும் சில சீர்கேடுகளையும் கலந்து சொல்லும் கதை.

About Hansika Suga :

ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.

பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.

எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.

திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.

Rent Now
Write A Review