Home / eBooks / Kaadhalenum Thervezhuthi
Kaadhalenum Thervezhuthi eBook Online

Kaadhalenum Thervezhuthi (காதலெனும் தேர்வெழுதி)

About Kaadhalenum Thervezhuthi :

பெற்றோரின் காதல் திருமணம் தோல்வி அடைந்ததில் பல இன்னலைகளை சந்தித்து திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி தீபா. படிப்பு மட்டுமே தனக்கு வளமான வாழ்வை கொடுக்கும் என்று தன் முழு கவனத்தையும் அதில் செலுத்தி வாழ்பவள். அவள் முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் ஒரே உறவான அவள் மாமாவின் மேல் அவளுக்கு மிகுந்த மரியாதை. அவளறியாமலே அவளை விரும்பும் அவள் மாமா ஜெய்சங்கர்.

சூழ்நிலை காரணமாக திருமணம் செய்யும் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

கதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நட்புகளே!

About Neela Mani :

வணக்கம் வாசக பெருமக்களே!

இந்த புத்தாண்டில் புஸ்தகாவோடு இணைந்து உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நிறைய நல்ல வாசகர்கள் உள்ள புஸ்தகாவில் என் நூல்களும் இருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சிறுவயதில் இருந்து நிறைய கதைகள் எந்த வகையினமாக இருந்தாலும் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தம். என் ஆதர்ச எழுத்தாளர்கள் பலரும் இருக்கும் புஸ்தகாவில் என் நூல்களும் இடம்பெறப் போவதில் எனக்கு மிகவும் பெருமையே. இதுவரை ஏழு கதைகள் எழுதியிருக்கிறேன். அவை யாவும் புஸ்தகாவில் உங்களின் பார்வைக்கு வைப்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

இன்றைய பரபரப்பான உலகத்தில் மனதிற்கு ஆசுவாசம் தரக்கூடிய இனிமையான காதல் கதைகளை தருவதையே என் நோக்கமாக கருதுகிறேன். படிக்கிற நேரத்தில் மனதுக்கு இனிமை தருவதோடு எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் நேர்மறை சிந்தனைகளும் என் கதைகளில் இருக்கும்.

என் கதைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை neelamani.writer@gmail.com என் இணைய அஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

அன்புடன் , நீலாமணி

Rent Now
Write A Review

Same Author Books