எண்பதுகளின் தொடக்கத்தில் அறிவொளி நாடகக் கலைஞனாக, தொழிற்சங்க பிரதிநிதியாக எல்லாவற்றிலும் தனது செய்நேர்த்தியை உறுதி செய்கிற விமலன் தன் கதைகளின் மூலமாக அகம் புறம் இரண்டையும் இன்னொரு தளத்திற்கு கொண்டு போகிறார்.
யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன.
சில கதைகள் படிமங் கலந்து கண்ணாமூச்சி காட்டுகின்றன. இப்புவி பரப்பில் தன் கண்ணுக்குள் படுகிற அவலங்கள் அனைத்தையும் மொத்தமாக படம் பிடிக்கிற ஆர்வத்தோடு கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போலவே மென்மையானதும் விசாலமானதுமாகிறது.
- எஸ். காமராஜ்
மெல்லிய காற்று போல படர்ந்து பாவி இவ்வாழ்வில் வெளியில் காலூன்றி திரிந்த நான் பார்த்தத,பகிர்ந்து கொண்ட,அனுபவித்த சம்பவங்களை சம்பவம் கருக்கொண்ட மனிதர்களை அவர்களின் வாழ்வை படைப்பாக்கியுள்ளேன், அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை இத்தொகுப்பை படிக்கிற நீங்கள்தான் சொல்ல வேண்டும். கருத்தை பதிவு செய்யுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.
Rent Now