Home / eBooks / Kaamam Iruntha Pozhuthu
Kaamam Iruntha Pozhuthu eBook Online

Kaamam Iruntha Pozhuthu (காமம் இருந்த பொழுது)

About Kaamam Iruntha Pozhuthu :

காமம்

ஒருவனை மனிதனாக்குவதும், மிருகமாக்குவதும் காமம் தான். காமத்திற்கான உடல் கிடைக்காத போது தான் பல வன்முறைகள் நடக்கிறது. துரோகம் பிறக்கிறது. குடும்ப சங்கிலி உடைக்கப்படுகிறது. ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை பாதை மாறி பயணிக்கிறார்கள்.

துரோகம் செய்த மனைவியை கொலை செய்வது, கணவன், காதலி கொலை செய்யும் மனைவி, மாணவனுடன் உறவு வைத்துக் கொள்ளும் ஆசிரியை, விபச்சாரத்தில் ஈடுப்படு நடிகை என்று காமம் சார்ந்த செய்திகளுக்கு தான் ஊடகங்களும் முக்கியதுவம் கொடுக்கிறது.

மனைவிக்கு துரோகம், பாலியல் தொழில், ஓர்பால் சேர்க்கை, விலைமாதுவுடனான நட்பு என்று எல்லாம் சேர்ந்த உலகத்தின் நாம் வாழ்கிறோம். இன்னும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதை தடுப்பதாக நினைத்து முயற்சிகளே வன்முறையாக மாறுகிறது.

காமத்தை கட்டுப்படுத்த நாம் யாரும் யோகிகளோ, ரிஷிகளோ இல்லை. ஆனால், காமத்தால் ஏற்படும் விளைவுகளை ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் பதினொரு கதைகளும் காமத்தை தேடி அழைந்த பாத்திரங்களை பற்றியது. தவறு செய்கிறவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக, அதன் பின்னால் இருக்கும் சிறு நியாயமான உணர்வை இச்சிறுகதைகள் சொல்கிறது. இது பாலுணர்வு சமந்தப்பட்ட கதை மட்டுமே... பாலுணர்வை தூண்டும் கதையல்ல.. என்ற Disclaimerயை பார்த்துவிட்டு வாசிக்கச் செல்லுங்கள்.

அன்புடன்
குகன்

About Guhan :

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rent Now
Write A Review