Home / eBooks / Kaanal Neelumo… Kaatchiyaay Maarumo
Kaanal Neelumo… Kaatchiyaay Maarumo eBook Online

Kaanal Neelumo… Kaatchiyaay Maarumo (கானல் நீளுமோ… காட்சியாய் மாறுமோ)

About Kaanal Neelumo… Kaatchiyaay Maarumo :

ருத்ரமூர்த்தி – விபத்தில் இறந்த தனது சகோதரியின் மகன் நீரஜ், மகள் நித்யா இருவரையும் பராமரித்து வரும் அதேவேளை, அவர்களின் தொழிலையும் பராமரித்து வளர்க்கிறார்.

ஒரு நாள், பலகாலங்களுக்கு முதல் தொடர்பற்றுப் போன நீரஜின் அத்தை மகள் நந்தினியை அவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

நந்தினியின் பெற்றோரும் நீரஜின் பெற்றோரோடு கார் விபத்தில் இறந்த பின் அவர்களுடனான தொடர்பற்றுப் போயிருந்தது.

திடீரென்று நிச்சயிக்கப்படும் கல்யாணத்தில் அவ்வளவு விருப்பமின்றியே, வளர்த்த பாட்டிக்காக தலையாட்டும் நந்தினி, கல்யாணத்தின் போது நீரஜை கண்டு திருப்தியோடு தான் இருக்கிறாள்.

அதுவே, அவனை முதன் முதல் சந்திக்கும் பொழுது....ஹப்பா! எங்களைப் போலவே அவளும் அதிர்ந்து போறாள்.

‘அவள் வாழ்வு கேள்விக் குறியாகி விட்டதா?’ வாசகர்களைப் போலவே அவளும் கதிகலங்கி யோசிக்கிறாள்.

அப்படி எதற்காக கலங்கிப் போனாள்?

அக்கலக்கம் உருவாகக் காரணம் என்ன?

அக்கலக்கத்தைக் களைந்து அவள் வாழ்வு மலர்ந்ததா?

இவை தெரியவேண்டுமென்றால் ‘கானல் நீளுமா காட்சியாய் மாறுமா...ஸ்ரீலக்ஷ்மி’ என்கின்ற கதையை வாசிக்கவேண்டும் மக்களே!

About Srilakshmi :

ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.

இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்

எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.

Rent Now
Write A Review