கண்ணகி அறநெறியில் வாழும் குடும்பத்தில் பிறந்தவள். கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவள். அவள் கற்புக்கரசியாக இருந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. மாதவியோ கணிகையர் குலத்தில் பிறந்தவள். அவள் கற்புக்கரசியாக இருந்தது ஆச்சர்யம்மல்லவா.. இந்த கதை மாதவியின் மாண்பை விளக்குவது.
There is no wonder of chastity of Kannaki because she was born in an orthodox family. But Madavi was born in a Kanikaiyar family, it's wonder that Madavi was chastity. The story reveals Madavi's Dignity.
நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.
நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.
15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.
Rent Now