Home / eBooks / Kaaranamilla Kaariyangal
Kaaranamilla Kaariyangal eBook Online

Kaaranamilla Kaariyangal (காரணமில்லாக் காரியங்கள்)

About Kaaranamilla Kaariyangal :

புல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.

மூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.

முதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்பது போல் உருக்கமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

அவள்... அடுத்த குறுநாவல்,

சூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.

காரணமில்லாக் காரியங்கள்..

கதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.

சொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.

About Vaasanthi :

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Rent Now
Write A Review

Same Author Books