Home / eBooks / Kaatrinile Varum Geetham
Kaatrinile Varum Geetham eBook Online

Kaatrinile Varum Geetham (காற்றினிலே வரும் கீதம்)

About Kaatrinile Varum Geetham :

பயணங்கள் எப்போதுமே வசீகரமானவை. மேற்கொள்பவர்களுக்குச் சந்தோஷங்களையும், புதிய அனுபவங்களையும் தரக்கூடியது. ஆனால் அதைவிட ஆச்சரியங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்துவது சிலரின் வாழ்க்கைப் பயணங்கள்.

உலகமறிந்த இசையரசியின் வாழ்க்கை கதையை எழுதுங்களேன் என்று கவிதா பதிப்பக உரிமையாளர் திரு. சேது சொக்கலிங்கம் கேட்டபோது சற்று யோசித்து சிலநாட்களில் சொல்லுகிறேன் எனச்சொன்னேன்.

என்னை எழுதச்சொன்னதற்கு எளிய நிலையில் துவங்கிச் சிகரம் தொட்ட சாதனையாளர் பேராசிரியர் பாலா (கிரேட் லேக் யுனிவர்சிட்டி) “வெற்றி வெளியே இல்லை” என்ற நான் எழுதிக் கவிதா வெளியிட்ட வாழ்க்கை கதையின் வெற்றி காரணமாக இருந்திருக்கலாம்.

இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் படித்தது, கேட்டது எல்லாம் எனக்குள் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இசையோடு பிறந்து இசையால் வளர்ந்த ஒரு சிறந்த இசைக்கலைஞராக மட்டுமே அறிந்திருந்த எம்.எஸ் என்ற பெண்மணியின் வெற்றிகரமான பன்முகப் பரிமாணங்கள் பிரமிப்பூட்டும் விஷயமாகயிருந்தது. மிகச்சிறிய வயதிலேயே தன் குல மரபுகளை உடைத்துத் துணிவுடன்தான் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அறிவு, ஆற்றல், அர்ப்பணிப்பு ஆன்மிகம் எனப் பல்வேறு ஆளுமைகள் மிளிரும் விஷயங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க இந்த வாழ்க்கைபயணத்தை வளரும் தலைமுறையினருக்காகப் பதிவு செய்யவேண்டியதின் அவசியத்தை உணர்ந்து அந்த நல்வாய்ப்பு கிடைத்ததற்காகச் சந்தோஷப்பட்டேன்.

ஒரு புகழ்பெற்ற ஆளுமையின் வாழக்கைக்கதையை அவர் வாழ்ந்த காலத்திற்குப் பின்னர் எழுதுவது சற்றுச் சவாலானது.படித்த தகவல்களைத் தாண்டி விபரங்கள், தகவல்கள் சேகரிக்கப் பலருடன் பேச வேண்டியிருந்தது. அவரோடு பழகிய ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பொக்கிஷமாக இருக்கிறது, மறக்காமல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். அவர் இசையை வியந்து போற்றியவர்களை விட இசையே அறியாத பலருக்கும் கூட அவர் ஆதர்சமாக இருப்பது ஆச்சரியம்.

அவை அனைத்தையும் எழுதிவிடவும் முடியாது ஒதுக்கிவிடவும் முடியாது. அதனால் சேகரித்த தகவல்களை அவர் குடும்பத்தினருடனும் மிக நெருங்கிப் பழகியவர்களுடனும் மூத்த பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு உறுதிசெய்து கொண்டவைகளை இசையரசியின் இந்த வாழ்க்கைக் கதையில் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.

About V. Ramanan :

பல்லாண்டுகளாக இயங்கிவரும் எழுத்தாளர் பத்திரிகையாளர். ஒரு பொதுத்துறை வங்கியின் மேநாள் மூத்த அதிகாரி. அரசியல்,சமூகம்,வரலாறு,பொருளாதாரம் வாழ்க்கைகதைகள்என பல விரிவானதளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு பத்திரிகைகளில் எழுதுபவர். அரசியல் சாராத தொலைக்காட்சி விவாதங்களில் ( Denomaitation/ GST/ WTO agreement/parris agreenet) பங்கு கொள்பவர். இந்து நாளிதழலில் சில ஆங்கில புத்தகங்களை விமர்சித்திருப்பவர்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பயணங்கள்செய்திருக்கும் இவர் சிறப்பான பல பயணக்கட்டுரைகளைப் எழுதியிருப்பவர்.

பயணநூல்கள், தொழில்முனைவோருக்கான நூல்கள், வாழ்க்கைகதைகள் வரலாற்று நிகழ்வுகள் போன்ற பல தளங்களில் 12 க்கும்மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர். இவரது “கடைசிக்கோடு” திருப்பூர் தமிழ்சங்க பரிசு பெற்ற புத்தகம். இவரது “நேருவின் ஆட்சி- பதியம்போடபட்ட 17 ஆண்டுகள்” புத்தகம் டெல்லி பல்கலைகழக தமிழ் பிரிவில் reference book ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது

“காற்றினிலே வரும் கீதம் என்ற தலைப்பில் திருமதி எம். எஸ் அவர்களின் வாழ்க்கை கதை எழுதியிருக்கிறார். கவிதா பதிப்பகம் அவர்களது 40ஆம் அண்டு விழாவில் அதைச் சிறப்பு வெளியீடாக வெளியிட்டிருக்கிறது.

நேதாஜியின் மரணத்துக்கு பின் அவர் சம்பந்தபட்ட ஆவணங்கள் அரசால் ரகசிய ஆவணமாக காக்கபட்டுவந்தது. நீண்ட சர்ச்சைகளுக்கு பின்னர் அவை இப்போது வெளியாகியிருக்கிறது.

அதை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் புத்தகம். நேதாஜி மர்ம மரணம் –ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை. இந்த ஆண்டுபுத்தகசந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இது.

மேநாள் நிதிஅமைச்சர் திரு . சிதம்பரம் அவர்கள் எழுதிய standing guard – a year in opposition என்ற ஆங்கில புத்தகத்தை கண் உறங்காக் காவல் என்று இவர் தமிழாக்கம் செய்த புத்தகம் அண்மையில் வெளியாகிருக்கிறது.

சென்னை மத்திய ரோட்டரி சங்கம் நடத்திய “நீர் பயன் பாட்டில் சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தையும், அதற்கான வழிமுறைகளையும் இலத்தரசிகளுக்கு விளக்கும் 17 கூட்டங்களில் பங்குபெற்றிருப்பவர்.

நீர் மேலாண்மையில் நாம் செய்யத்தவறியது என்ன? என்ற இவரது கட்டுரையை தினமலர் 2016ல் வெளியிட்டிருக்கிறது.

இரும்பு மனிதர் வல்லபாய் படேல் பற்றிய புத்தகம் ஒன்றை இப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்.

Rent Now
Write A Review

Same Author Books