Home / eBooks / Kaatru Vaanga Ponen
Kaatru Vaanga Ponen eBook Online

Kaatru Vaanga Ponen (காற்று வாங்கப் போனேன்)

About Kaatru Vaanga Ponen :

வாழ்க்கையோடு தொடர்புடையவற்றை கையில் எடுத்து கவிதையில் கையாள வேண்டுமென்பது என் திட்டம், ஒரு செயலை அதிகமான கற்பனை கலந்து சொல்வதினால் அதன் இயல்புத் தன்மை முற்றிலுமாக மாறிவிடுகிறது. காட்சிப் படுத்துவதோடு மட்டுமின்றி உள்ளுணர்வை வெளிக் கொணர்ந்து கற்பனைகளைத் தூவ வேண்டும். சொல்லும் செய்தி படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கவும், புரிய செய்யவும் வேண்டும். எதுகை, மோனை, சந்தவடிவத்திற்கு ஆர்வம் செலுத்தினால் சொல்ல விரும்பும் செய்தி சிதைந்து விடுமோ என்கிற பதற்றம் எனக்குள் நீடிக்கிறது. அவையெல்லாம் போகிற போக்கில் கவியோடு சேர்ந்து வந்தால் எனக்குக் கவலையே கிடையாது.

இப்புத்தகத்தின் கவிதைகள் சமகாலத்தோடு தொடர்புடையவை, முரட்டுச் சிந்தனைகள் இருக்காது. தாகத்தோடு வந்தவனுக்கு தண்ணீர்தான் அவசியமே தவிர, அந்த நேரத்தில் தங்கபஸ்பம் தேவையற்றது. நாக் கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது என் முடிவு. அருவருப்பான, அற்பத்தனமான புத்தகங்களைப் படிக்கிறேன். அதனை என் கவிதைகளிலோ, கட்டுரைகளிலோ பயன்படுத்துவதில்லை. அத்தகைய நூல்களைப் படிக்காமல் இருந்துவிடலாம். ஆனால் அவற்றைத் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாக கூக்குரல் இடுகிறார்கள், என் நண்பர்களும் அப்புத்தகங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

என்னதான் அந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று ஏக்கத்தோடு வாங்கிப் படித்தால் அசிங்கமான கற்பனைகள், அபத்தமான கதாபாத்திர சித்தரிப்புகள், பயன்படாத பொருளைக் கூவி விற்கும் கருப்பொருள் போன்றவை முற்றிலும் விரக்தித் தன்மையை எனக்குள் ஏற்படுத்தின. நான் எழுதுவதே சிறந்ததாக வாதிடவில்லை, கொண்டாடி மகிழ்வதற்கும், இன்பம் அடைவதற்கும், மனத்தூய்மை பெறுவதற்கும் தமிழிலே ஏகப்பட்ட நூல்கள் இருக்கின்றன. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இலக்கியங்கள் உந்துசக்தியாக அமைய வேண்டும், மாற்றம், மாற்றம் என்று சொல்லி மோசமான எண்ணத்தை வளர்த்துவிடக் கூடாது. காமத்தைக் காதலோடு அணுக வேண்டும். இல்லையென்றால் விபரீதம் இப்பப் புரியாது. மனிதனின் இதயம் வித்தியாசப்பட்டது, கெட்டதை உடனே ஏற்றுக் கொள்ளும், நல்லதை நாலு நாள் தள்ளிப் போடவே வைக்கும்.

ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது அதை அனுபவித்து எழுதவேண்டும் என்ற கட்டாயத்தை வகுத்துக் கொள்ளக் கூடாது. கேட்டல், பார்த்தல், படித்தல் போதுமானது. நாம் அனுபவிக்க நினைத்து விட்டால் அன்றிலிருந்து நம் வளர்ச்சி தடைப்படப் போவதாக அர்த்தம், நேரம், மனநிலை, உடல், சுபாவம் பாதிக்கப்படும். அனுபவிக்க முடியாதவற்றை அனுபவித்தது போல எழுதினால் அதனை அடைந்துவிட்ட திருப்தியை உணரலாம்.

உலகியலைப் பற்றி யோசிக்கும்போது பலதரப்பட்ட வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடிகிறது. சட்டங்கள், நீதிகள் ஏன் எதிராகச் செயல்படுகின்றன. அவை சாமானியர்களுக்கு வேறு மாதிரியாகவும், உயர்ந்தவர்களுக்கு வேறு மாதிரியாகவும் பிரதிபலிக்கின்றன, ஒருமுறை மண்ணில் வாழ்ந்துவிட்டுப் போவதற்கு எத்தனை கோடி இடர்ப்பாடுகள் நடக்கின்றன, அநீதிகள் தலைவிரித்தாடுகின்றன.

ஒரு பக்கம் மக்களுக்காகப் பல இயக்கங்கள் போராடுகின்றன. இன்னொரு பக்கம் மக்களே தங்களின் உரிமைக்காக, வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டமே மனித வாழ்க்கை என்றாகிவிட்டது. போராடியே ஆகவேண்டும், போராடினால் தான் வெற்றி பெற முடியும்.

நட்புடன், நலங்கிள்ளி

About Nalangilli :

நலங்கிள்ளி ஒரு சிறந்த கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். திரைப்படம் மற்றும் ஊடகம் சார்ந்த முதுகலைப் படிப்பை முடித்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர்.

இது வரை வினவக் கண் விழித்தேன், அவளில்லாத சனி ஞாயிறு மற்றும் காற்று வாங்கப் போனேன் என மூன்று சமூக கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார்.

வெகுஜன பத்திரிக்கை மற்றும் இலக்கியப் பத்திரிகைகளில் சிறுகதை கவிதை கட்டுரை எழுதி வருகிறார். இணையதளம் மற்றும் மின் இதழ்களிலும் எழுதி வருகிறார்

Rent Now
Write A Review

Rating And Reviews

Book Review  Jayasree

I have read the book and useful to me the lines are super what the concept talented man

Book Review  Jayasree

I have read the book and useful to me the lines are super what the concept talented man

Book Review  Jayasree

Good

Book Review  Rathan mouli

Very nice book . I wish u health wealth happiness be with u always and Ur family

Book Review  vignesh

Vanakkam nalangilli anna Na unga book kaatru vaanga ponen paduchuruken ithu Pondra kavithaigal elutha vaalthukal Anna

Same Author Books