Home / eBooks / Kadanthu Pogum Megangal
Kadanthu Pogum Megangal eBook Online

Kadanthu Pogum Megangal (கடந்து போகும் மேகங்கள்)

About Kadanthu Pogum Megangal :

காதலுடன் இணையும் உள்ளங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெற வேண்டும். அதுதான் உண்மையான காதல். பெரியவர்களிடம் இருக்கும் பொறுப்பும், பொறுமையும் இக்கால சந்ததியினரிடம் இருப்பதில்லை.

வாழ்க்கை பாடத்தை இக்கதையின் நாயகனும், நாயகியும் உணர்ந்தார்களா என்பதை கடந்து போகும் மேகங்கள் என்ற நாவல் அழகாக சொல்கிறது.

காதலுடன் கலந்த இக்குடும்ப கதை உங்கள் மனங்களை வசீகரிக்கும் என்ற நம்பிக்கையுடன்.

- பரிமளா ராஜேந்திரன்

About Parimala Rajendran :

அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..

எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.

என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.

இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.

150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.

Rent Now
Write A Review

Same Author Books