சிறு வயதில் எனக்கும் என் சகோதரனுக்கும் கண்ணில் படுவதை எல்லாம் படிக்கும் ஆர்வம் இருந்தது. நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் படித்து முடிப்போம். எல்லா தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும் அலசி முடித்து விடுவோம்.
கல்கியும், சாண்டில்யனும், சுஜாதாவும் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள். என் படிக்கும் ஆர்வமே பின் காலத்தில் என் எழுத்து முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்று சொல்லலாம்.
நான் 1988லிருந்து (37 வயது) தான் எழுத ஆரம்பித்தேன். உள் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத குணம் உடைய நான் என் உணர்வுகளுக்கு வடிகாலாகத்தான் எழுத்தை பயன்படுத்த ஆரம்பித்தேன்.
என்னை சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்களில் என்னை பாதித்தவற்றை எல்லாம் எழுத்து வடிவத்தில் கொண்டு வர முயற்சி செய்தேன். பேசும் பொழுதே சம்பவங்களை கதை வடிவில் சொல்லும் திறன் அமைந்ததால் நிகழ்வுகளை கோர்வையாக கதை வடிவில் கொண்டு வருவது இயல்பாகவே எனக்கு அமைந்துவிட்டது.
முதன் முதலில் சிறு கட்டுரை ஒன்றும், பத்தி கட்டுரை ஒன்றும் மங்கையர் மலரில் வெளிவந்தது. பிறகு மாதத்திற்கு ஒன்று இரண்டு என்று சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். சிறு குழந்தைகளுடன் கூட்டுக் குடும்ப சூழலில் குடும்ப பொறுப்பு அதிகமாக இருந்ததால் கிடைத்த நேரத்தில் சிறுகதைகள் தான் என்னால் எழுத முடிந்தது.
என் பெண் பிரசவத்திற்கு வந்த போது எங்கள் வீட்டில் பூனை ஒன்று வளர்ந்து வந்தது. அதை வைத்து என் கற்பனைக்கு தோன்றியதை கதை வடிவமாக கொண்டு வந்தது தான் “மியாவ்” என்னும் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்தது.
அஸ்ஸாமில் என் பெண் வீட்டு பணிப்பெண்ணையும் சென்னையில் எங்கள் வீட்டு பணிப்பெண்ணையும் இணைத்து கதை வடிவமாக கொண்டு வந்தது தான் “சியாமா” என்ற சிறுகதை. கலைமகள் மாத இதழில் வெளிவந்தது.
இதயம் வார இதழ், மங்கை மாத இதழ்களிலும் என் சிறுகதைகள் வெளியானது. என் சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளிவரும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் திருப்தியும் வார்த்தையில் அடங்காது. (பத்திரிகையில் வெளிவருவதற்காகவோ அல்லது சன்மான தொகைக்காகவோ இல்லாமல் என் மனத் திருப்திக்காக எழுத ஆரம்பித்தேன்) பல வருடங்கள் கழித்து இந்த கதைகளை முழுக்க முழுக்க வாசகரின் கோணத்தில் படிக்கும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. எப்போது எழுதினேன்? எப்படி எழுதினேன்? எதற்காக எழுதினேன் என்று யோசித்து நினைவிற்கு கொண்டு வரும் விளையாட்டு மிகுந்த உவகை அளிக்கின்றது. நான் எழுதிய சிறுகதைகளிலிருந்து சிலவற்றை தொகுத்து புத்தக வடிவில் வெளிவருவதற்கு என் கணவரின் முயற்சிதான் காரணம் என்றால் மிகையாகாது. மேலும் என் உணர்வுகளை தொடும் நிகழ்வுகளை கதை வடிவில் கொடுக்கும் முயற்சியை தொடர்ந்து நடத்துவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
- பிரபா ராஜன்
குடும்ப தலைவியும், பேரன் பேத்திகளும் உடைய பிரபா ராஜன்ஜன் தமிழில் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள்கள் எழுத ஆரம்பித்தது 37 வயதில். அவருடைய சில கதைகளும் கட்டுரைகளும் முன்னணி தமிழ் பத்திரைக்களில் வெளியாகியுள்ளன.
மங்கையர் மலர் நடத்திய கட்டுரை போட்டி ஒன்றில்ஒன்றில் முதல் பரிசு வெண்று தங்க நாணயம் பெற்றுள்ளார்.
திரைப்படப் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்களில் ஆர்வம் கொண்ட பிரபா சாஸ்திரி நகர் லேடீஸ் கிளப் மற்றும் இன்னர்வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் சவுத் என்ற தொதொண்டு நிறுவனத்திலும் உறுப்பினர் ஆவார்.
Rent Now R.V.Rajan
Women centric stores written in an engaing style