நாம் அன்றாட வாழ்வில் பல்வேறு விதமான மனிதர்களைக் காண்கிறோம். நாம் சந்திக்கும் அத்தனை பேர்களும் உருவ அமைப்பில் ஒரே விதமாகத் தோன்றினாலும் குண வேறுபாட்டில் எத்தனையோ வித்தியாசமானவர்கள்.
இயற்கையின் அமைப்பிலே மனித சிருஷ்டி என்பது போற்றத்தக்க புனிதமான பிறவியாகும். மேகத்திலிருந்து பொழியும் மழை நீர் தூய்மையானதாக இருந்தாலும் அது விழும் இடத்தைப் பொறுத்து அதன் தன்மை, நிறம் மாறி மாசுபடுவது போல், பிறக்கும்போது தூய்மையாகப் பிறக்கும் மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தடம் மாறி, குணம் மாறி, சராசரி மனிதனை விடக் கீழாக- பிறர் பார்த்து அதிசயிக்கத்தக்க வித்தியாசமானவனாகக் காட்சியளிக்கிறான்.”
அத்தகைய வித்தியாசமான- விசித்திரமான சில மனிதர்களைக் ‘கனவு மனிதர்கள்’ என்ற இந்நூலில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் திருமதி இந்துமதி அவர்கள்.
இந்துமதி என்ற பெயரில் எழுதும் இவர் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட நூறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன.மூன்று சிறுகதைத் தொகுதிகள்.இவரது தரையில் இறங்கும் விமானங்கள்,சக்தி,நாவல்கள் சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும்,கங்கா யமுனா சரஸ்வதி சன்,ராஜ் டிவி களிலும், நீ நான் அவள் விஜய் டிவியிலும் தொடர்களாக ஒளிபரப்பப் பட்டன.இவர் திரைப்படத் துரையிலும் கால் பதித்துள்ளார்.அஸ்வினி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து நடத்தியுள்ளார். திரைப்படத் தணிக்கைக்குழு அங்கத்தினராகவும் இருந்துள்ளார்.தி
இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவைகளே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
Rent Now