புதுப் புது சர்க்கரை ஆலைகள்
புதிய புதிய சாகுபடியாளர்கள்
புதிய புதிய பணியாளர்கள்
புதுப் புது தொழில் நுட்பங்கள்
இவர்களை - இவைகளை மேலான்மை நோக்கில் நிர்வகிக்க கரும்பு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து சுருக்கமாகவும் - விளக்கமாகவும் தகவல் தர இந்நூல் மூலம் முனைந்திருக்கிறேன்.
இதனுள் –
பல கேள்விப்பட்டவை
பல படித்தவைகள்
பல பழக்கப்பட்டவைகள்
இவை அனைத்தையும் ஒருங்கே செயல்படுத்தினால் கரும்பில் கட்டாயம் நல்ல மகசூலாகும் - சர்க்கரை மீட்பும் கிடைக்கும்.
அதற்காகவே தொகுக்கப்பட்ட இந்நூலினைத் தொகுக்கச் செய்தி கொடுத்து உதவிய அத்துணை பேருக்கும் - எனது இனிய நன்றி.
இந்நூல்
கரும்பு நிர்வாகம் செழிக்கக்
கையில் இருக்க வேண்டிய நூல்.
இவர் இப்போதைய சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் தனது வேளாண் கல்வியை அண்ணாமலை பல்கலைக் கழகம், கோவை, லண்டன் மற்றும் மேற்கிந்திய தீவுகள் போர்ட் ஆஃப் ஸ்பெயினிலும் கற்றவர். பள்ளிப் பருவத்திலேயே எழுதத் வந்துவிட்டார்.
சிறுவர் கதைகள், குழந்தைப் பாடல்கள், தொடர் கதைகள், நாவல்கள், வேளாண் தொழில் மற்றும் இதர நூல்கள் என்று இதுவரை 78 நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.
Rent Now