பிடிவாதம் பிடித்த மதுமிதா - உயிருக்குயிராய் நேசித்த ரஞ்சித்தை விட்டு விலகி... வேறொருவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதிக்கிறாள்.
மதுமிதா மீது உயிரையே வைத்திருக்கும் ரஞ்சித் தவியாய் தவிக்கிறான். உயிர் உருக... இதயம் கரைய கண்கள் கலங்க... வேதனையில் விம்மும் ரஞ்சித்.
தன் உண்மை காதலை மதுமிதாவிற்கு புரிய வைத்தானா?
நேசம் கொண்ட நெஞ்சங்கள் சேர்ந்ததா?
'கட்டிக் கரும்பே கண்ணா' விடை சொல்லும்.
- இந்திரா நந்தன்
குறுகிய காலத்தில் சொற்பமான நாவல்களே எழுதியிருந்தாலும், வாசகர்களுக்குப் பிடித்தமான நாவலாசிரியை ஆக மாறிவிட்டதில் பெரு மகிழ்ச்சி.
பி.பி.ஏ படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறேன். ஜி.எம். இந்திரா என்ற பெயரிலும் தொடர்ந்து நாவல்கள் எழுதி வருகிறேன்.
வாசிப்பது என்பது மனதை ஒரு நிலைப்படுத்தக் கூடியது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள்.
இதனாலேயே மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோயாளிகளாக மாறிவிடுகிறார்கள். அனைவரும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மனம் ஒரு நிலைப்படும்.
வாசிக்கும்போது தங்களுடைய பிரச்சனைகள், கவலைகளை மறந்து கதை கலத்தினுள்ளே எண்ணங்களை ஒருமுகப்படுத்துகிற போது இதயம் இலேசாகிறது.
விறுவிறுப்பான பொழுதுபோக்கான நிகழ்வுகளை யதார்த்தமான நடையில் தருவதுதான் என் வெற்றியின் காரணம். என் நாவல்களை மகிழ்ச்சியுடன் வாசியுங்கள்.
அன்புடன் உங்கள்
இந்திரா நந்தன்
Rent Now