Home / eBooks / Kaveri
Kaveri eBook Online

Kaveri (காவேரி)

About Kaveri :

வாழ்க்கையில் பல அனுபவங்களின் நினைவுகள் நீங்காத தடங்களாய் மனதில் நிலைத்துவிடுகின்றன. அவற்றில் பசுமையான நினைவுகளும் உண்டு. அப்போது என் கணவர் திரு. ரமணன் இராஜஸ்தானில் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள பார்மீரில் மாவட்ட ஆட்சியாளராக இருந்தார்.

தார் பாலைவனத்தின் ஒரு பகுதி அது. முழுவதும் மணல் பிரதேசம். தகிக்கும் வெய்யில். தாங்க முடியாத குளிர். தண்ணீர் கஷ்டம். எங்கோ தொலைதூரத்திலிருந்த கேணியிலிருந்து ஒட்டகத்தின் மீது தோல் பைகளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொண்டுவந்து கொட்டுவார்கள். ஒட்டகம் உடம்புக்கு வந்து படுத்துக் கொண்டால் திண்டாட்டம்தான். காவல் துறையினருக்கான குடியிருப்பிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு மண்பானையில் குடிநீரைத் தினமும் வேலையாள் கொண்டுவருவான். சமையல், சாப்பாடு, விருந்தோம்பல் எல்லாமே அதற்குள் அடங்கவேண்டும், பாம்பும், தேள்களும், எலிகளும் சகவாசிகளாய் எங்களைச் சுற்றிவரும்.

இரவு நேரங்களில் அமைதி படர்ந்து கிடக்கையில் காற்றின் ஓசைகூடப் பயங்கரமாய் ஒலித்து கிலியூட்டும். நாகரீகத்தோடு எங்களை இணைத்த ஒரே போக்குவரத்து தினமும் ஒரு முறை ஜோத்பூருக்குச் சென்ற ரயில்தான்!

அன்றாட வாழ்க்கையில் எழும் கனமான பிரச்சினைகளை நகைச்சுவை உணர்வோடு அணுகிப் பார்ப்போமானால் அவற்றின் பரிமாணம் குறைந்து, லேசாகி, சமாளிப்பது எளிதாகிவிடும் என்பது அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம்.

- லக்ஷ்மிரமணன்.

About Lakshmi Ramanan :

இவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.

விகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.

இவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.

இவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.

கும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.

இவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books