செக்ஸ் வெறி பிடித்த ஆங்கில வார்த்தைகளில் டைட்டில் வைக்கும் டைரக்டர் ஆர்யா ரூம் அட்டென்டர் போர்வையில் வரும் கொலையாளியால் கொலை செய்யப்படுகிறான். டியாரா துப்பறிய ஆரம்பிக்கிறான். ஹீரோயின் ஸாராவை விசாரிக்கிறான். இரண்டாவது கிராமத்து ஒரிஜினல் படங்கள் எடுக்கும் டைரக்டர் சோழன் கொல்லப்படுகிறான். உதவி டைரக்டர் ஒப்பனையில் போய் தயாரிப்பாளர் கங்கோத்ரியின் புவனை கொலைகாரன் கொல்கிறான். அடுத்து திரைக்கதை வசனகர்த்தா செல்வதிருமால் கொலை செய்யப்படுகிறார். அடுத்து என்ஆர்ஐ நடிகர் சுந்தர் கொலை. சீரியல் கில்லிங் பற்றி ஆராய்ச்சி செய்யும் பால்பாண்டியனை டியாரா சந்திக்கிறான். பால்பாண்டியன் கைடு கல்யாணராமன் ஆராய்ச்சிக்கு உதவிய ஐவர் கொலை செய்யப்படுகின்றனர். டியாரா செல்லும் ரயில் கடத்தப்படுகிறது. கொலைகாரனும் அவனது சகாக்களும் தலைவிரித்து ஆடுகின்றனர். கொலைகாரன் சீரியல் கில்லிங் காலேஜ் வைத்து நடத்துகிறவன் என உண்மை வெளிவருகிறது. சீரியல் கில்லர் டியாராவால் கொல்லப்படுகிறான். மீண்டும் சீரியல் கில்லிங் காலேஜ் உதயமாகிறது. மொத்தத்தில் நூறுடன் ஆக்ஷன் நிரம்பிய அதிரடி நாவல் இது.
திரு.ஆர்னிகா நாசர் அவர்கள் முதுகலை சமூகவியல் பட்டம், மருத்துவ நிர்வாகம் முதுகலை பட்டப்படிப்பு, வெகுஜன தொடர்பு முதுகலை பட்டப்படிப்பு, குற்றவியல் மற்றும் தடய அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு, வழிகாட்டல் மற்றும் ஆலோசனை முதுகலை பட்டப்படிப்பு, இளம் முனைவர் பட்டம், சமூகவியல் மருத்துவ மேலாண்மை நிர்வாகம்-முதுகலை பட்டம், பி.ஹெச்,டி ஆய்வும் செய்து வருகிறார்.
இவர் ஆயிரத்தை நெருங்கும் சிறுகதைகள், 150 நாவல்கள், 50 தொடர்கதைகள், நூறை நெருங்கும் தொகுப்புகள், ஒரு தொலைக்காட்சி தொடர், மூன்று வானொலி நாடகங்கள் 100 நேர்காணல்கள், 300 இலக்கிய மேடைப்பேச்சுகள், 100 விஞ்ஞான சிறுகதைகள், 200 இஸ்லாமிய சிறுகதைகள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பு நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது குடும்பம் - மனைவி-வகிதா, மகள்-ஜாஸ்மின் மற்றும் மகன் - நிலாமகன் ஆவர். தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்.