திருமதி லதா முகுந்தன் அவர்கள் குடும்ப நாவல்கள் எழுதுவதில் தனித்துவம் படைத்தவர். இதுவரை 20க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதி வாசகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளார்.
'லதா முகுந்தன் நாவல்களில் பெண்ணீயம்' என்பதைப் பற்றி பி.எச்.டிக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2009க்குள் அந்த ஆய்வு முடிந்து விடும்.
ஏற்கனவே தனித்தனியாய் இவரது நாவல்களில் எம்.பில். ஆய்வு மேற்கொண்டு இருவர் பட்டம் பெற்று விட்டனர்.
இத்துணை சிறப்புடைய திருமதி லதா முகுந்தன் அவர்கள், மீண்டும் ஒரு குடும்பத்தைக் கதைக்களமாய் எடுத்துக் கொண்டு, இப்பொழுது உறவுகளுடன் - அவர்களின் நெளிவு, சுளிவுகளுடன் - கொண்டாடியுள்ளார்.
வாசியுங்கள். கருத்துக்களை தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் மேலும் நல்ல நூல்களைத் தர நாங்கள் நிச்சயம் முயற்சி செய்வோம்.
இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர். தமிழ்நாட்டில் மிகப் பாரம்பர்யமிக்க வழக்கறிஞர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பல்வேறு இதழ்களில் சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை தொடர்ந்து 20 நாவல்கள் இவர் எழுதி வெளி வந்துள்ளது.
இவரது நாவல்களை ஆய்வு செய்து இதுவரை 4 பேர் எம். பில்(M. Phil) பட்டம் பெற்றுள்ளார்.
இவரது 50 வயதில் இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
Rent Now