ஜ.பாக்கியவதி (பிறப்பு 29 ஏப்ரல் 1965) தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத்தரசியான இவருடைய வாசிப்புப் பழக்கம் காரணமாக கோயில்கள் உலா, வாசிப்புப்பழக்கம், தட்டச்சின் முக்கியத்துவம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் சில கட்டுரைகள் தினமணி இதழிலும், பத்திரிக்கை.காம். இதழிலும் வெளிவந்துள்ளன. நூல் முயற்சியாக இவர் சென்றுவந்த கோயில்களைப் பற்றி எழுதி வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, தன் கணவரின் பணி நிறைவு நாளன்று கோயில் உலா என்ற தலைப்பில் நூலாகவெளியிட்டார். அதனைத் தற்போது புஸ்தகா மூலமாக மின்னூலாகக் கொணர்வதில் பெருமை கொள்கிறார். அவர் தொடர்ந்து இன்னும் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
Rent Now Rajesh
Good book