Home / eBooks / LGBT
LGBT eBook Online

LGBT (எல்ஜிபிடி)

About LGBT :

’ஓர் பாலின உறவு’ இயற்கைக்கு எதிரான என்ற வார்த்தையை பயன்படுத்தி சமிபத்திய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூடாங்குளம், GAIL பைப் லைன், விவசாய நிலங்களில் ப்ளாட் விற்பனை, மணல் கொள்ளை போன்ற விஷயங்களில் பயன்படுத்தப்படாத “இயற்கை எதிரானது” வார்த்தை ’ஓர் பாலின உறவில் சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டது. இதனால், ’ஓர் பாலின உறவு’ நிஜமாகவே இயற்கை எதிரானதா? என்ற கேள்வி பதில் தேடலே இந்த சிறுநூலாக வடிவமைந்தது.

இயற்கைக்கு எதிரானது என்றால் அதில் ‘செயற்கை’ தனம் இருக்க வேண்டும். இதில் என்ன செயற்கை தனம் இருக்கிறது? இரண்டு மனித உணர்வுகளுக்கு ரசாயம் பொருள் கலவை வந்ததா? அல்லது அணு உலை வந்ததா? மரபணுக்களை செயற்கைத்தனமாக மாற்றப்பட்டதா? இதை எப்படி இயற்கைக்கு எதிரானது என்று கூறப்படுகிறது என்று புரியவில்லை. இயற்கையின் சீற்றத்தை கட்டுப்படுத்த தெரியாத மனிதன் ’இயற்கையின் நீதி’ என்று சொல்கிறான். அப்படி இருக்கும் போது இயற்கையாக உடலில், மனதில் உருவான உறவை எப்படி ’இயற்கைக்கு எதிரானது’ என்று சொல்கிறார்கள்?

’ஓர்பால் சேர்க்கை’ சட்டப்படி தவறு என்றால் எப்படி சட்டத்திற்கு முன் நிருபிக்கப்படும். அவர்கள் அந்தரங்க அறையில் வீடியோ கெமிரா பொருத்தியா? அப்படியென்றால் ஒருவரின் அந்தரங்க அறையில் கெமிரா வைப்பது சட்டப்படி சரியா? ஓர்பால் சேர்க்கை சட்டப்படி தவறு என்று கூறுபவர்கள் அதை நிருப்பிக்க கையாளாகப் போகும் முறை என்ன? அதற்கும் சரியான விடை இல்லை.

சில மத நூல்கள் ஓர்பால் சேர்க்கை தவறு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்கிறது. இருந்துவிட்டு போகட்டும். (இங்கு மத நூல்களை ஆராயத் தொடங்கினால், LGBT பற்றி நாம் தெரிந்துக் கொள்வதில் இருந்து தடம் மாறிவிடுவோம்.)

ஒரு தண்டனை அங்கிகரித்தால் தானே அந்த தண்டனைக் கூட அனுபவிக்க முடியும். அப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதால் தானே மத நூல்களில் ’தண்டனை’ என்ற பெயரில் இருக்கிறது. இதில் இருந்தே உலகத்தில் இல்லாத ஒன்றை யாரும் பேசவில்லை என்பதற்கு மத நூல்களே சாட்சியாக இருக்கிறது. ஓர்பால் சேர்க்கையில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் வேண்டுமானால் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கலாம். எதிர்க்கலாம். அது அவர்களின் குடும்பப் பிரச்சனை. பெற்றோர் என்ற உரிமை இருக்கிறது. அதில் அரசியல் கட்சிகள், மத நம்பிக்கை என்ற மதவாதிகள் போன்ற மூன்றாவது மனிதர்கள் நுழைவது கூட அநாகரிகம்.

மத அடிப்படையாகவோ, இயற்கை அடிப்படையாகவோ ’ஓர்பால் சேர்க்கை’ எதிர்ப்பது நியாயமற்றது. இருவர் சம்மதத்தில் நடக்கும் மனித அந்தரத்தைப் பற்றி பேச இங்கு யாருக்கும் உரிமையில்லை. நீதி மன்றம் உட்பட….!!

’LGBT’ பற்றி எழுதியதால் நான் ‘கே’ என்று நினைக்க வேண்டாம். பாரதியார் ’பெண்’ என்பதால் பெண் உரிமைப் பற்றி பேசினார் என்று நினைப்பவர்கள் அப்படி என்னை நினைக்கலாம்.

நான் ’LGBT’களுக்காக போராடுபவன் இல்லை. தங்களுக்கான அங்கிகாரத்தை போராடி அவர்கள் பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த சிறு நூல் ஓர் பால் சேர்க்கையை ஆதரிக்கும் நூல் இல்லை. எதிர்க்கும் நூல் இல்லை.

தங்கள் அங்கிகாரத்திற்காக போராடுபவர்களை தடுக்காமல் இருக்க இந்த புத்தகம் உதவும். அவர்களை புரிந்துக் கொள்ள (முழுமையாக அல்ல) ஒரு முணைப்பை ஏற்படுத்துவதே இந்த நூலின் நோக்கம். அவர்களை புரிந்துக் கொண்ட பிறகு, உங்கள் ஆதரவு அவர்களுக்கு இல்லையென்றாலும் எதிர்க்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கிறேன்.

'ஓர் பால் சேர்க்கை' பற்றிய புரிதலும், அதன் போராட்டம் தொடங்கிய விதம், ஒரு சில ஓர்பால் சேர்க்கையாளர் பற்றின வாழ்க்கை குறிப்பு போன்ற விபரங்கள் மட்டுமே இருக்கும் என்ற Disclaimerரோடு உங்களை அடுத்த அத்தியாயத்திற்கு அழைத்து செல்கிறேன்.

அன்புடன்
குகன்

About Guhan :

32 வயதுடைய மென்பொருள் வல்லுநரான இவரது இயற்பெயர் கண்ணன். இவர் எல்லா விதமான புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, வரலாறு, சினிமா, நாவல் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். கலீலியோ கலிலீ (வரலாறு), உறங்காத உணர்வுகள் (கவிதை), நடைபாதை (சிறுகதை), பெரியார் ரசிகன் (நாவல்) போன்ற எழுத்துக்கள் சில எடுத்துக்காட்டாகும். இவர் பெற்ற விருதுகள் Bharathi Paniselvar Award – Given by ‘All India Writer Association’ and NRK Award 2013 (1st prize in essay category )– Given by Nam Urathasinthanai for the book ‘உலகை உறையவைத்த இனப்படுகொலைகள்’

Rent Now
Write A Review