Home / eBooks / Madisaar Maami 2.0
Madisaar Maami 2.0 eBook Online

Madisaar Maami 2.0 (மடிசார் மாமி 2.0)

About Madisaar Maami 2.0 :

1992 ஆகஸ்ட் மாதம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான ரங்கநாயகி என்ற இந்த மடிசார் மாமி உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களை ஒரு உலுக்கு உலுக்கியவள்!

தனக்காக மட்டுமே வாழும் தியாகப் பெண்களுக்கு மத்தியில் தன் கணவனின் கட்டளையை ஏற்று, அவன் இறந்த பிறகும் அவனது குடும்பத்தை தன் தோளில், நெஞ்சில் சுமந்த ஒரு வினோதப் பெண்மணி!

தனக்கென ஒரு குழந்தை இல்லாமல், தன் இரண்டு மச்சினர்களையும், மூன்று நாத்தனார்களையும் தன் குழந்தைகளாக பாவித்து கரை சேர்த்தவள்!

ஆசாரமான புரோகிதர் கைலாசத்துக்கு வாழ்க்கைப்பட்டதால், மடிசார், ரங்கநாயகியின் நிரந்தர உடை!

குறுகின காலமே கணவனுடன் குடித்தனம் நடத்திய தெய்வீக தாம்பத்யம்!

எனக்குப் பிறகும் இந்தப் பொட்டும் மூக்குத்தியும், மடிசார் கட்டும் உன்னை விட்டு விலகக் கூடாது! காரணம் அதில் நான் உன்னுடன் வாழ்வேன் என்று அன்புக் கட்டளையிட்ட கணவனுக்காக, அவளது சுமங்கலிக் கோலம் தொடர்கதையாக.

அதனால் அவள் கேட்ட ஏச்சும் பேச்சும், பட்ட அவமானங்களும் கொஞ்சமல்ல!

அதை அவள் பொருட்படுத்தவில்லை!

கணவன் இறந்த பிறகு வெறும் சமையல் பலகார பட்சண வேலைகள் மட்டும் பிள்ளைகளை கரைசேர்க்க முடியாது என உணர்ந்து மாலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெறுகிறாள்!

அங்கு தலைமை தாங்க வந்த தொழிலதிபர் டேவிட் ஆசிர்வாதம் தன் கம்பெனியில் வேலை தருகிறார். ரங்கநாயகியின் பேச்சு சாதுர்யம், புத்திக் கூர்மை புரிந்து அவளை வக்கீலுக்குப் படிக்க வைக்கிறார்.

ரங்கநாயகி லீகல் அட்வைஸர் ஆகிறாள்.

குழந்தைகள் ஐந்து பேருக்கும் ‘மன்னி' என்கிற சொல், அம்மாவுக்கும் மேலே!

காலம் சென்ற கணவனுக்கு அம்முலு!

டேவிட் மற்றும் மாமியாருக்கு ரங்கம்!

உலகம் முழுக்க அவள் மடிசார் மாமி!

மூத்தவன் ராகவன் உத்தமன், அவன் மனைவி உஷா திமிர் பிடித்தவள், ரங்கநாயகிக்கு எதிரி.

அடுத்தவள் ஹேமாவுக்கு மன்னிமேல உயிர். அவள் கணவன் முரளிக்கு மாமி எதிரி.

வைதேகி, ஸ்ரீதர் இருவருமே மாமியின் பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள். கிச்சாமிக்கு மன்னி கடவுள்.

மைதிலிக்கு மன்னி, தேவதை!

டேவிட் ஆசிர்வாதத்துக்கு தோழி

புரட்சிக்கரமான வக்கீல் - பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக ஆஜராகும் பெண்! மைதிலி, முகமதிய பகதூரை காதலிக்க, பெரும் மதக் கலவரம் தாண்டி, - மணம் முடித்து வைக்கிறாள்.

பிராமண ஆச்சாரங்களையும், மடிசார் கட்டையும் விட மாட்டாள். ஆனால் ஜாதி மத பேதம் பார்க்காமல் மனித நேயமே வாழ்வின் ஜீவநாடி என துணிச்சலாக குரல் கொடுத்த பெண்!

தன்னை எதிர்த்த சுரேஷை தண்டித்தாள்.

அவனது ஊமைத் தங்கை ஷோபா கயவர்களால் கற்பிழக்க அவளையே கிச்சாமிக்கு மணம் முடித்தாள்.

தன் கடமைகளை முடிக்க பெரும் போராட்டம் நடத்தினாள். ரத்தக் கண்ணீர் வடித்தாள்.

ஒவ்வொரு அடியும் ரங்கநாயகி எடுத்து வைக்கும் போது, உள்ளே உள்ள அவளது கணவன் கைலாசத்தின் உத்தரவைக் கேட்டே நடந்தாள்!

கடைசி வரை எதிர்த்த மாமியாரை பெற்ற தாயாக பாவித்தாள்.

கணவன் இறந்தும் அவருடன் மானசீக குடித்தனம் நடத்தினாள்.

கடமை முடிந்ததும், கடந்த காலத்துக்கே சென்று அவருடன் மானசீக வாழ்வு வாழ்ந்து, அந்த மனப் போராட்டத்தில் இனி இந்த பூமியில் வேலையில்லை என முடிவெடுத்து, அவருடன் ஐக்கியமானாள்!

ரங்கநாயகியின் உயிர் 1993ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரிந்தது!

அவளால் ஆளாக்கப்பட்ட ஐந்து பேரும் கதறினார்கள்.

அந்தப் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல் துடித்தார்கள். அவர்கள் மட்டுமல்ல...

அந்த நேரம்...

உலகம் முழுக்க உள்ள தமிழ் வாசக, வாசகிகள் கதறி விட்டார்கள். எழுதிய என்னை வசைபாடித் தீர்த்தார்கள்!

இது கற்பனைக் கதாபாத்திரம் இல்லையோ... இவள் நிஜமா? இது சத்யமா என்று நானே மிரண்டு போகும் அளவுக்கு என்னையும், தமிழ் வாசக நெஞ்சங்களையும் ஆக்ரமித்தவள் ரங்கநாயகி என்ற இந்த மடிசார் மாமி!

அந்த ரங்கநாயகி மீண்டும் வரப் போகிறாள்!

மடிசார் மாமியுடன் உலவிய கதாபாத்திரங்களில் மாமியாரும், டேவிட்டும் மட்டும் இன்று இல்லை.

அவளால் உருவாக்கப்பட்ட, ராகவன், ஹேமா, வைதேகி, கிச்சாமி, மைதிலி இந்த 5 பேரும் இவர்கள் பெற்ற பிள்ளைகளும் உங்களை சந்திக்க வருகிறார்கள்!

சரி... யார் ரங்கநாயகி?

யாரிந்த மடிசார் மாமி - 2.0?

ரங்கநாயகிதான் கணவனுடன் வாழச் சென்று விட்டாளே!

ரங்கநாயகிக்கு, சுமந்து பெற்ற குழந்தையும் இல்லையே? பிறகு எப்படி?

எல்லா கேள்விகளுக்கும் பதில் வரப்போகிறது!

About Devibala :

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Rent Now
Write A Review

Same Author Books