Home / eBooks / Maha Periyavaa - Part 1
Maha Periyavaa - Part 1 eBook Online

Maha Periyavaa - Part 1 (மகா பெரியவா – தொகுதி 1)

About Maha Periyavaa - Part 1 :

‘மகா பெரியவா’ என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சி ஸ்ரீமடத்தின் 68-வது ஆச்சார்ய புருஷர். எளிமையின் எடுத்துக்காட்டு. கருணையின் பிறப்பிடம். அன்பின் வடிவம்.

தான் வாழ்ந்த நூறு வருடங்களிலும் அடியவர்களுக்கென்றே வாழ்ந்து, தன் அனுக்ரஹத்தை அனைவருக்கும் வாரி வழங்கி வந்திருக்கிறார் காஞ்சி பெரியவா.

உணவாகட்டும்; உறக்கமாகட்டும்; உரையாடலாகட்டும். எதிலுமே பகட்டு இருக்காது. கட்டுப்பாடு இருக்கும். காஞ்சி ஸ்ரீமடத்தில் அந்த மகான் வாழ்ந்த காலத்தில் ஓலைக் கொட்டகையின் ஓரமாக அவர் உடலை வளைத்துக் குறுக்கிப் படுத்து உறங்கியதைப் பார்த்து நெகிழ்ந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

இறைவனோடு பக்தர்கள் நேருக்கு நேர் பேசும் ஒரு காட்சியை

திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் சில வருடங்களுக்கு முன் பார்த்துப் பரவசப்பட்டேன். அங்கு வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், படுத்துறங்கும் பரந்தாமன் சந்நிதிக்கு எதிரே உள்ள ஒரு மேடையில் நின்று, ஸ்ரீஅனந்தனைப் பார்த்து வெகு நேரத்துக்கு மலையாளத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். முதலில், தனக்கு முன்னால் உள்ள ஒரு பக்தருடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி, கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். ஆனால், அவருக்கு முன்னும் பின்னும் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் ஸ்ரீஅனந்தன் தரிசனத்திலேயே திளைத்திருந்தார்கள். அப்படி என்றால், வேறு யாரிடம் இவர் மனமுருகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி என் மனதைக் குடைய... சற்று நேரத்துக்குப் பிறகுதான் இந்தப் பெண்மணி, சாட்சாத் அந்த அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது. அந்தக் கேரளப் பெண்மணியின் பக்தி என்னை வியக்க வைத்தது. பின்னர் ஒரு முறை கேரள நண்பர் ஒருவர் சொன்னார்: ‘இறை பக்தியில் இங்குள்ள பலரும் அப்படித்தான். தன் வீட்டில் உள்ளவருடன் பேசுவது போலவே இறைவனுடன் பேசுவார்கள். சில நேரங்களில் இறைவனும் அவர்களுக்குப் பதில் தருவான்.’

அடுத்து வந்த சில மாதங்களில் இதே காட்சியை குருவாயூர் திருக்கோயிலிலும் காண நேர்ந்தது. மெய் சிலிர்த்தேன். கிட்டத்தட்ட இதே போன்ற காட்சியை காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் முன்னாலும் சில நேரங்களில் நான் கண்டிருக்கிறேன். கண்களில் ஈரம் கசிய, அவரது அதிஷ்டானத்தின் முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இவரிடம் பூரண சரணாகதி அடைந்தோர், நற்பலன்களை சுகமாக அனுபவித்து வருகிறார்கள். மகா பெரியவாளின் அன்புக்கும் ஆசிக்கும் பாத்திரமான எத்தனையோ பக்தர்கள் கடல் கடந்தும், மாநிலம் கடந்தும் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்; இன்றும் பகிர்ந்து வருகிறார்கள். அதனால்தான், மகா பெரியவா நூல் தற்போது பத்து தொகுதி வரை வந்திருக்கிறது.

மகா பெரியவாளின் திருவடிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Rent Now
Write A Review

Rating And Reviews

  s

4654313

Same Author Books