Home / eBooks / Maha Periyavaa - Part 4
Maha Periyavaa - Part 4 eBook Online

Maha Periyavaa - Part 4 (மகா பெரியவா – தொகுதி 4)

About Maha Periyavaa - Part 4 :

பக்தி என்பது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. இதைத்தான் பல சொற்பொழிவுகளில் சொல்லி வருகிறேன். ‘அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தடவிப் பார்த்தாளாம்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல் ஓர் ஆலயத்துக்குப் போய் வந்தவுடனே பலனை எதிர்பார்க்கின்றார்கள் பலர். காலில் குத்திய முள்ளை உடனே எடுத்து விடலாம். ஆனால், அந்த முள் குத்திய காயம் ஆறுவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால், மகான்கள் வழிபாட்டில் பலன்கள் என்பது உடனுக்குடன் கிடைக்கும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிற வரிசையில் குருவுக்குப் பிறகுதான் தெய்வத்துக்கு இடம். ஆக, மகா பெரியவா போன்ற குருமார்களை ஆத்மார்த்தமாக வழிபட்டால், பலன் உண்டு நிச்சயம். தெய்வத்தின் சந்நிதிக்கோ, மகானின் ஜீவ சமாதிக்கோ சென்று ஒரு பிரார்த்தனை வைக்கின்றோம் என்றால், ‘இங்கு கருவறையில் வீற்றிருக்கின்ற தெய்வமோ மகானோ வெறும் கல் அல்ல... ஒப்பற்ற சக்தி. இந்த சக்திதான் எத்தனையோ பேரின் கஷ்டங்களைத் தீர்த்து வருகிறது. அந்த வகையில் நான் வைக்கும் பிரார்த்தனைகளையும் செவி மடுத்துக் கேட்டு, உரிய நிவாரணத்தை நமக்கும் அருளும்’ என்கிற பாஸிடிவ் எண்ணம் சம்பந்தப்பட்டவருக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், ‘இந்த தெய்வம் நமக்கெல்லாம் எங்கே உதவப் போகிறது? இதற்கு உயிர் இருக்கிறதா, என்ன? இது வெறும் கல்தானே!’ என்கிற நெகடிவ் எண்ணம் பிரார்த்திப்பவரின் மனதில் ஒரு விநாடி நேரம் தோன்றி விட்டால், பிரார்த்தனை பலன் கொடுக்காது. நம்பிக்கை மட்டுமே பரிபூரண சரணாகதி! பரிபூரண சரணாகதிதான் பக்தி. நம் மனதில் பக்தியை வளர்க்கா விட்டால், இந்த மனம் பாழாகி விடும். ‘ஒரு மகான் அவதரித்தார்; வாழ்ந்தார்’ என்பதோடு நில்லாமல், இந்த தேசத்துக்கு எத்தனையோ நல்ல விஷயங்களைச் சொல்லி, புதிய மாற்றங்களையும் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் மகா பெரியவா என்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஆன்மிக உலகில் புரட்சியாளர் என்று ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் சொல்வோம். அவர்களுக்கு அடுத்து அந்தப் புரட்சியை மிக அமைதியாக நடத்தி, உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர் காஞ்சி மகா பெரியவா என்றால், மிகை இல்லை.

About P. Swaminathan :

பி.சுவாமிநாதன், 04 நவம்பர் 1964ம் வருடம் பிறந்தார். சொந்த ஊர் திருப்புறம்பயம் (கும்பகோணம் அருகில்). பட்டப் படிப்பு பி.எஸ்ஸி . (கணிதம்) கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியிலும், எம்.ஏ. ஜர்னலிஸம் - மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தில் 22 வருடமும் திரிசக்தி குழுமத்தில் 3 வருடமும் அனுபவம் உள்ளது.

ஆன்மிகச் சொற்பொழிவாளராக...
'பொதிகை' தொலைக்காட்சியில் 'குரு மகிமை' என்ற தலைப்பில் மகான்களைப் பற்றிய நிகழ்ச்சி (திங்கள் முதல் வியாழன் வரை - காலை 6.00 மணி முதல் 6.15 வரை). 1,000 எபிசோடுகளைக் கடந்த - நேயர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்.
'ஜீ தமிழ் தொலைக்காட்சி 'யில் 'அற்புதங்கள் தரும் ஆலயங்கள்' என்ற தலைப்பில் ஆலயங்களின் மகிமையைச் சொல்லும் நிகழ்ச்சி (திங்கள் முதல் வெள்ளி வரை - காலை 6.30 மணி).
தவிர, வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் எண்ணற்ற தலைப்புகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றி வருகிறார். சொற்பொழிவுக்காகப் இவர் பல வெளிநாடுகளுக்கு பயனம் செய்துள்ளார். கனடா, சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரெய்ன், கத்தார், ஓமன், நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இவர் பல விருதுகளை பெற்றுள்ளார். அவற்றில் சில விருதுகள்:
- செந்தமிழ்க் கலாநிதி (திருவாவடுதுறை ஆதீனம் வழங்கியது)
- சேஷன் சன்மான் விருது 2017
- குருகீர்த்தி ப்ரச்சார மணி (காஞ்சி காமகோடி பீடம்)
- குரு க்ருபா ப்ரச்சார ரத்னா (ஸ்ரீ ஸ்கந்த சஷ்டி விழா குழு, துபாய்)
- சஞ்சீவி சேவா விருது (தாம்ப்ராஸ் காமதேனு டிரஸ்ட்)
- பக்தி ஞான ரத்னம் (ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குருஜி, ஆர்ட் ஆஃப் லிவிங், பெங்களூரு)
- ஆன்மீக தத்வ ஞான போதகர் (கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலயம்)
- சத்சரித வாக்தேவம் (ஸ்ரீ மஹாசங்கரா கலாச்சார மையம், கோவை)

இதுவரை பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்:
- ஜீ தமிழ் தொலைக்காட்சி ('தெய்வத்தின் குரல்' என்ற தலைப்பில் காஞ்சி மகா பெரியவாளின் மகிமை பற்றிப் பல காலம் தொடர்ந்து பேசியது)
- சன் நியூஸ் (நேரலைகள், விவாதங்கள்)
- விஜய் (பக்தி திருவிழா)
- மக்கள் டி.வி. (ஆலய தரிசனம்)
- ஜெயா (சிறப்பு விருந்தினர்)
- தந்தி டி.வி. (கும்பாபிஷேக நேரலை மற்றும் சொற்பொழிவுகள்)
- நியூஸ் 7 (ஆன்மிக நேரலை வர்ணனைகள்)
- வானவில் (மகான்கள் குறித்தான தொடர்)
- ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி சேனல்
- ஸ்ரீசங்கரா (பல நேரடி ஒளிபரப்புகள்)
- மெகா டி.வி...

ஆன்மிக எழுத்தாளராக:
- தொடர்கள் வெளியான இதழ்கள்: ஆனந்த விகடன், அவள் விகடன், சக்தி விகடன், திரிசக்தி, தின மலர், மங்கையர் மலர், தீபம், கோபுர தரிசனம், இலக்கியப் பீடம், தின இதழ், காமதேனு, ஆதன் நியூஸ் உள்ளிட்டவை.
- தினமலர், காமதேனு (தி ஹிண்டு குழுமம்), ராணி, காமகோடி, ஆதன் நியூஸ் போன்ற இதழ்களில் தற்போது தொடர் எழுதி வருகிறார்.
- தனது 25 வருட அனுபவத்திலும் உழைப்பிலும் உருவான ஆன்மிகக் கட்டுரைகளுக்குப் புத்தக வடிவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வருகிறார். 'ஸ்ரீ மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் பொக்கிஷம் போன்ற இந்த நூல்களை வெளியிட்டு வருகிறது.
எழுதிய நூல்கள்: சுமார் 40-க்கும் மேல்

விற்பனையில் சாதனை படைத்த நூல்கள்:
- சதுரகிரி யாத்திரை (பலரும் அறிந்திராத இந்த அதிசய மலையை உலகுக்கு அறிமுகப்படுத்திய அற்புதத் தொகுப்பு)
- ஆலயம் தேடுவோம் (புராதனமான - சிதிலமான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய் தரிசித்து, எழுதி குடமுழுக்கு நடத்தி வைத்தது)
- மகா பெரியவா (இத்துடன் 10 தொகுதிகள்)
- திருவடி சரணம் (பாகம் ஒன்று, பாகம் இரண்டு)

Rent Now
Write A Review

Same Author Books