Home / eBooks / Malarum Manangal
Malarum Manangal eBook Online

Malarum Manangal (மலரும் மனங்கள்)

About Malarum Manangal :

இந்நூல் நான் மிகுந்த மனநிறைவோடும், தெய்வீக உணர்வோடும் தொகுத்திருக்கிற ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை சிந்தனைகளை உள்ளடக்கிய என் உரைகள் செறிந்தது. பொதுவாக நான் பேசுவது சிறந்த விஷயங்களாக இருக்குமே தவிர என்னைப் பேச அழைப்பவர்கள் நினைப்பதுபோல் நான் பெரிய பேச்சாளன் அல்லன். நல்ல விஷயங்களப் பேசுவதற்குப் பெரிய பேச்சாளனாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை என்பது வேறு விஷயம்.

என்னுடைய பொழிவுகளெல்லாம் என்னைச் சந்திக்கிற நண்பர்களுடன் நான் அளவளாவுவது போலிருக்குமே தவிர பொதுக்கூட்டங்களில் பேசுவது போன்ற அலங்காரங்களோடு அமைவதில்லை. இயல்பான இத்தகைய பாணியும் பல இடங்களில் வரவேற்கப்படுகிறது.

ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னை மனித சமூகத்துக்கு வழங்கியிருக்கிற மகத்தான செய்திகளில் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு அவற்றின் தொடர்பாக நானறிந்த நல்ல தகவல்களையும் சேர்த்து வழங்கிய பொழிவுகளின் தொகுப்புதான் இந்நூல். இந்நூல் பயனுள்ளதாகவும், நிறைவாகவும் அமைந்ததற்கு என் எழுத்தாற்றலோ பேச்சாற்றலோ காரணம் அல்ல. இவற்றை அருளியவர்களின் அறிவாற்றலும், ஆன்மபலமும், சமூக அக்கறையுமே காரணம்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்நூலைப் படித்தும், திருத்தியும், அற்புதமான அணிந்துரை வழங்கிப் பாராட்டியும் பெருமைப்படுத்தியிருக்கிற என் இனிய நண்பரும், சக எழுத்தாளரும், அன்னை அன்பருமான திரு. ஜனகன் அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பும் மதிப்பும் எனக்குக் கிடைத்துள்ள பேறாகக் கருதுகிறேன். அவரது அணிந்துரையே இந்நூலின் முதற்கட்டுரைபோல் அத்துணைச் சிறப்பாக அமைந்ததில் மகிழ்கிறேன். அவருக்கும் என் நன்றி எப்போதும் உரியது.

எஸ். இராதாகிருஷ்ணன்.

About Kalaimamani Ervadi S. Radhakrishnan :

நாடறிந்த எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சமூக ஆர்வலர், பேச்சாளர், பத்திரிகையாளர்.

96 நூல்களுக்கும் மேல் எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பெற்றவர்.

கலைமாமணி, இலக்கியப் பேரொளி, கவிச்சிற்பி, ஞாலக் கவிஞர், எழுத்துச் செம்மல், நாடகப் பேரொளி, சேவாரத்னா போன்ற விருதுகள் பெற்றவர். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ( FETNA ) வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர். கனடா உதயன் இதழின் உலகளாவிய இலக்கியச் சாதனையாளர் விருது பெற்றவர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, கனடா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற உலக நாடுகளுக்கு இலக்கியப் பயணம் சென்று வந்தவர்.

ஆசிரியர், வெளியீட்டாளர் - கவிதை உறவு இலக்கிய மாத இதழ், நிர்வாக அறங்காவலர் - கவிதை உறவு சாரிட்டபுள் டிரஸ்ட்.

புகழ் வாய்ந்த ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். ஊடகவியல், வாழ்வியல், பத்திரிகையியல் பயிற்சியாளர்.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

உலகெங்கும் விரிந்த நட்பு வட்டத்தைப் பெற்றிருக்கிற வெற்றியாளர்.

Rent Now
Write A Review

Same Author Books