இது ஒரு கைத்தறி பட்டு நெசவாளியின் கதை! எப்படி பட்டின் கதையை பட்டென்று சொல்லிவிட முடியாதோ அது போலத்தான் நெசவாளியின் வாழ்க்கையும். பட்டு போல நளினமானது, ஆனால் பாவு போலச் சிக்கலானது.
இது பட்டுப் புழு…..பட்டுப்புடவையாகும்……….நீண்ட….கதை!
பட்டு… பார்ப்பதற்கு நளினம்! அணிந்தாலோ ஆடம்பரம்! ஆனால்… நெய்வதோ கடினம்!
குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாகத் திரிந்த மனித குலத்தின் நாகரீக வளர்ச்சியில், உடையும் முக்கியமான ஒரு அம்சமாகும்.
உழவன் ஏர் பிடிப்பான், நெசவாளன் தறி பிடிப்பான். அதனால் தான் உழவும், நெசவும் உலகளவில் எந்த காலத்திலும் முக்கியமான தொழில்களாக இருக்கின்றன.
ஆண்டிகளின் கோமணமானாலும் அரசனின் பட்டாடையானாலும், அடிப்படையில் மானம் காக்கும் மகத்தான நெசவுத் தொழிலிலிருந்து வந்த ஒரு விஷயமே.
‘மனம் நெய்ய வாராயோ…’ இக்கதை பிண்ணனியும் நலிந்து வரும் கைத்தறிப்பட்டின் நெசவைப் பற்றியதுதான்.
இக்கதையை நலிந்து வரும் பட்டு, மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
-ஸ்ரீலக்ஷ்மி சகோதரிகள்.
ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.
சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.
இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்
எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.
Rent Now