Home / eBooks / Manasu Valikkuthu Mathumitha!
Manasu Valikkuthu Mathumitha! eBook Online

Manasu Valikkuthu Mathumitha! (மனசு வலிக்குது மதுமிதா!)

About Manasu Valikkuthu Mathumitha! :

வித்யா ஒரு ஓவியப் பைத்தியம். மற்ற பெண்கள் சினிமா, ஷாப்பிங் மால் என்று சுற்றும் போது, இவள் மட்டும் நகரில் எங்காவது நடைபெறும் ஓவியக் கண்காட்சிக்கு செல்வாள். ஒரு ஓவியக் கண்காட்சியில் தன்னை மெய் மறக்கச் செய்த ஓவியங்களை வரைந்த ஓவியர் சேகரை நேரில் பாராட்டச் செல்கிறாள். அப்போது அவர் அழகில் மயங்கி காதலில் விழுகிறாள். எதிர்ப்பே இல்லாத அவர்களது காதல் எளிதாய்த் திருமணத்தில் முடிந்தது.

ஆனால், அதற்குப் பிறகுதான் பிரச்சினைகள் தோன்றின. ஓவியம் வரையும் சேகரால் குறைந்த அளவே வருமானம் ஈட்ட முடிந்ததால், பொருளாதாரச் சிக்கல் தோன்றுகின்றது. “அந்த மாதிரி”யான படங்கள் வரைய, அதிக தொகைக்கு வாய்ப்பு வர, திட்டித் திருப்பியனுப்புகிறான் சேகர்.

ஆனால், வித்யாவோ, அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை நமக்கு காசு பணம்தான் முக்கியம், என்று சொல்லி கணவனை ஒப்புக் கொள்ள வைக்கிறாள்.

அரை மனதுடன் சென்ற சேகர், அங்கே ஆபாச ஓவியத்திற்கு மாடலாக வந்திருந்த தன் பழைய காதலியைக் கண்டு நொந்து போகிறான்.

அதன் பிறகு அவர்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகளை ஒரு கவிதை நயத்தோடு படைத்துள்ள எழுத்தாளர் நிச்சயம் வாசகர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டு விடுவார்.

About Mukil Dinakaran :

சமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.

தனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.

சிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

மேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.

Rent Now
Write A Review

Same Author Books