மனிதர்களின் வாசத்தை கண்டாலே மண்ணில் மறைந்து விடும் விசித்திரமான ஒரு மூலிகை.அந்த மூலிகையையும் அரசகுல செல்வங்களையும் பெட்டியில் வைத்து புதைத்து விட்டு மரணிக்கும் அரண்மனை வைத்தியர்.மன்னரின் கட்டளைக்கிணங்க மூலிகையையும் குல செல்வங்களையும் தேடி கிளம்புகிறார்கள் ஆதித்தனும் அரிஞ்சயனும்.உடன் இணைந்து கொள்கிறான் பைராகி.இந்த மூவர் குழு தங்கள் வேட்டையில் வெற்றியடைந்ததா என்பதே கதை!
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now