ஒரு சிறு விபத்து, அந்த விபத்துகான காரணம், அதன் காரணமாய் ஒரு நாயகி, அந்த நாயகியே அந்த விபத்தின் மருந்தாய், ஒரு மிக மிக அழகான ஒரு மையப்புள்ளியில் தொடரும் ஒரு உணர்ச்சிக் காவியம். கதையின் இறுதி வரை நாயகனை படுக்கையில் வைத்திருக்கும் கதாசிரியரின் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. அதன் கிளைக்கதையாய் ஒரு சிறுகதை பலரின் வரவேற்ப்பை பெற்றது என்பது மிகையாகாது. இரண்டு வேறு விதமான காதல்களை கவிஞரின் ஸ்டைலில் சொல்லியிருப்பது அவரின் தனிப்பட்ட முத்திரை. இது கதாசிரியரின் ஒரு மைல்கல் எனலாம்.
நான், அனைவராலும் கவியாளன் என்று அழைக்கப்படும் ஸ்ருதிவினோ. எழுத்தாளர்கள் சாண்டில்யன், தி ஜா, ஜெயகாந்தன் போன்றோரின் எழுத்துக்களைப் படித்து எனக்குள் வந்த ஆர்வத்தை எழுத்துக்களாக வடிக்க ஆரம்பித்து அதில் வெற்றி கண்டவன். காதலையும் கலவியையும் முறையாகச் சொல்ல வேண்டும் என்ற எனது கொள்கையிலிருந்து பிரளாமல் இன்று வரை எழுதி வருகிறேன்... என்றென்றும் உங்களின் பேராதரவை எதிர் பார்த்து காத்திருக்கும் உங்கள் கவியாளன் ..
Rent Now