Home / eBooks / Marakka Mudiyatha Mugavarigal
Marakka Mudiyatha Mugavarigal eBook Online

Marakka Mudiyatha Mugavarigal (மறக்க முடியாத முகவரிகள்)

About Marakka Mudiyatha Mugavarigal :

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத முகங்கள் உண்டு. எத்தனையோ முகங்களை மனம் பார்த்து கடந்து சென்றாலும், ஒரு சில முகங்களை தன் எண்ணம், தன் தொகுப்பில் உறைய வைத்துக் கொள்கிறது.

அப்படியாக என் இதய பெட்டகத்தில் பாதுகாப்பாய் விருப்பத்தோடு வைத்திருந்த உயிர் பொக்கிஷங்களை இந்த காகித நதியில் கவி மீன்களாய் உயிர்ப்பித்து இருக்கிறேன்.

எத்தனை நாட்கள்தான் எனக்குள்ளே இந்த முகங்களின் அற்புத உணர்வுகளையும், செயல்பாடுகளையும் நானே அசைப்போட்டுக் கொண்டிருக்க இயலும்.

காலத்தின் கட்டாயம் உணர்வுகளின் உந்துதள்ளுதலில் உருவான இந்த படைப்புகள் இன்று உங்கள் கரங்களில் மறக்க முடியாத முகவரிகளாய் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இனி இவைகள் உங்கள் இதயங்களில் ஆட்சி செய்யட்டும். உங்களின் உணர்வு அலைகளில் தன் கீத இசையை மீட்டட்டும் என விட்டு விடுகிறேன்.

இந்த கதைகள் உங்கள் வாழ்வை மருரூபப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு நான் அடுத்தகட்ட எழுத்து பயணத்திற்கு கடந்து செல்கிறேன்.

About Kavimugil Suresh :

கவிமுகில் சுரேஷ் என்கிற பெயரில் தர்மபுரியில் இருந்து வருகிறேன். எம்.ஏ.(சமூகவியல்) மற்றும் B.L.Isc(நூலகவியல்) படித்து பட்டம் பெற்றேன். இருபத்தி இரண்டு வருடங்களாக சமூக நிறுவனங்களில் மேலாளராக பணியாற்றி வந்திருக்கிறேன். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு சமூக தொண்டாற்றி உள்ளேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுவது என ஆரம்பித்து பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறேன். இது வரை வெளியான புத்தகங்கள்:
1.மண்மீதில் விண்மீன்கள் (கட்டுரை)
2.மறக்கமுடியாத முகவரிகள் (கவிதை)
3.ஜீவநதியின் ஓடங்கள் (கவிதை)
4.உடைக்கும் உளிகள் (கவிதை)
5.கண்ணான கண்ணே (நாவல்) தேவியின் கண்மணியில் என்னுடைய முதல் நாவல்
இது தவிர சங்கவி பதிப்பகத்தின் மூலம் என்னுடைய "மறக்க முடியாத முகவரிகள்" கவித் தொகுப்பு வெளியானது

தற்பொழுது "கண்ணாடி மீன்கள்" எனும் சிறுகதைத் தொகுப்பு பரிதி பதிப்பகத்தின் மூலம் வெளியாகியிருக்கிறது.

இதுவரை கண்ணதாசன் விருது, சமூகப் பணிக்காக அப்துல்கலாம் விருது,கவிமுகில் விருது, கவித்திலகம் விருது,கவிமுரசு விருது, தர்ஷினியின் சிறுகதை செம்மல் விருது, காந்தி விருது, பாரதி விருது, திருவள்ளுவர் விருது,Icon தகடூர் விருது, என 50க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து வார இலக்கிய இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறேன். இப்பொழுது தொடர்ந்து எழுத்துப்பணியில் இயங்கி வருகிறேன் நான் எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது என் அருமை மனைவி சலோமி சங்கீதா. எனக்கு இரு பிள்ளைகள் ஜாஸ்மின், ஜோஷ்வா. தர்மபுரி சி.சுரேஷ் எனும் பெயரிலும், கவிமுகில் சுரேஷ் என்னும் பெயரிலும் படைப்புகளை படைத்து வருகிறேன்.

Rent Now
Write A Review

Same Author Books