காடு, மலைகளில் வாழ்ந்த மனிதன், மரத்திலிருந்து நீண்டதூரம் வெளியில் வந்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறிவிட்டான். அதிகாலையில் அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து அவன் சோம்பல் முறிக்கும்போது தூரத்தில் இருந்து மரம் அவனை பார்த்து சிரிக்கிறது. வாக்கிங் போகும்போது சிலு சிலுவென அடிக்கும் குளிரும் அவன் முகத்தில் அறைந்ததுபோல் இருக்கிறது. என்னை விட்டு நீ நீண்டதூரம் சென்றுவிட்டாலும் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை. உனக்கு நல்ல காற்றை தருவதற்காக அழகிய சிறு சிறு செடிகளாக உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறேன் என்கிறது.
சிறுவயதில் என் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா என்னையும் என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு சிறிய தோட்டத்துக்கு சென்றார். அங்கிருந்த ஒரு குட்டையில் தண்ணீரை முகர்ந்து செடிகளுக்கு ஊற்றும்படி கூறினார். ஒருவருடன் ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு தண்ணீரை ஊற்றி விளையாடினோம்.
காலம் கடந்தது நான் கல்லூரிக்கு பீஸ் கட்ட என் அப்பாவிடம் பணம் கேட்டபோது அவர் என்னுடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வாங்கிவரும்படி கூறினார். மாமாவிடம் பணம் பெற்றுக்கொண்டு, ‘நீங்கள் ஏன் அப்பாவுக்கு பணம் தருகிறீர்கள்?’என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் உன் அப்பாவின் தோட்டத்தில் உள்ள புளிய மரங்கள், வாழை மரங்களை குத்தகைக்கு வாங்கியுள்ளேன். நான் பலமுறை உன்னுடைய படிப்பக்காக் கொடுத்தப் பணம் எல்லாம் உன் அப்பா வளர்த்த மரங்கள் கொடுத்ததுதான்’என்றார். சிறுவயதில் என் நண்பர்களுடன் செடிகளுக்கு தண்ணீர்விட்டதை நினைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டேன். அதற்குப்பின்புதான் மரங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. என் அப்பாவிடமும் மாமாவிடமும் மரங்கள் குறித்து பல தகவல்களைகேட்டு தெரிந்து கொண்டேன். மரங்கள் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுக்கு புத்தகமாக கொடுத்துள்ளேன்.
என்னுடைய நூல்களை இ-புக்ஸாக தொடர்ந்து வெளியிட்டு வரும் புஸ்தகா.காம் இணைய தளத்திற்கும் அதன் மேலாளருக்கும் என்னுடைய நன்றிகள்.
சூர்யா சரவணன்
சொந்தவூர் திண்டுக்கல். படிப்பு எம்.ஏ. பத்திரிக்கை, எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் சென்னை வந்து பிரபல நாளிதழில் பணியாற்றுகிறார். சுமார் 12 நூல்களை எழுதியுள்ளார். ரேடியோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார். எழுத்து, பத்திரிக்கை துறையில் சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிவருகிறார்.
இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், பத்திரிக்கை ஆகியவை இவருக்கு பிடித்த துறைகள். சுயமுன்னேற்றம். ஊடகம் குறித்து கல்லூரிகளிலும் மேடையில் வகுப்பு எடுத்துள்ளார்.
Rent Now chandaran
this book is very usefull and excalant