நான் எத்தனையோ நாவல்களை எழுதியிருந்தாலும் இந்த நாவல் மட்டும் என்னால் ரசித்து எழுதப்பட்ட நாவல்.
இக்கதையின் போக்கு ரொம்பவே வித்தியாசமானது. இறந்து போய்விட்டதாய் நம்பப்படும் நபர் மீண்டும் உயிரோடு வந்தால்...?
அதுவும் காதல் கொண்ட கண்களுக்கு சொல்லவா வேண்டும்? தன் காதலனை காவு வாங்கிய அதே... காவிரியாறு...
அதே... சுழித்துக் கொண்டு ஓடும் தண்ணீர்...
மிதக்கும் பரிசல்... காதலனை மறக்க முடியாமல் மணக்கோலத்தில் பரிசலில் இருந்து குதிக்கும் சாருமதி பிழைத்தாளா?
தன் காதல் முகத்தைப் பார்த்தாளா?
நெகிழ்வான காதல் காவியம்.
வாசியுங்கள்.
தமிழ்நாட்டின் முன்னனி எழுத்தார்களுல் என்னையும் ஒருவனாய் கொண்டாடும் வாசக உள்ளங்களுக்கு பனிவான வணக்கம். உங்கள் இதயத்தில் எனக்கென ஒரு இடத்தை தந்திருக்கும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி.
இந்த இடத்தைத்தொட நான் பட்ட சிரமங்கள் கொஞ்சமல்ல. என் பதினேழு வயதில் எழுத்து பயணம் தொடங்கியது. தற்போது 45 வயதாகிறது. இந்த இருபத்தியெட்டு வருடங்களில் 500க்கும் மேற்ப்பட்ட சிறுகதைகள் மற்றும் 400 நாவல்கள் வரை எழுதிவிட்டேன்.
குமுதம் வைரமோதிரம் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, குமுதம் லட்ச ரூபாய் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு, தேவி வார இதழ் நாவல் போட்டியில் முதல் பரிசு, கண்மணி நாவல் போட்டியில் பரிசு, இலக்கிய சிந்தனை விருது, விகடன், கல்கி இதழ்களில் பரிசு என ஏராளமானப் பரிசுகளை வாங்கியிருக்கிறேன். அனைத்து இதழ்களிலும் எனது படைப்புகள் வெளியாகிருக்கிறது.
வாசிப்பதன் மூலம் மனம் ஒரு நிலைப்படுகிறது. வாசிக்கிறபோது தங்கள் கவலைகளை மறந்து வேறொரு உலகத்திற்க்கு செல்கிறார்கள். எனது நாவல்களை வாசிக்கிறபோது விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பது போல காட்சிகள் கண்களுக்குள் விரியும். முடிக்கும் வரை கீழே வைக்க மாட்டார்கள். காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும், அமானுஷ்யம் ஆகட்டும், வாசிக்கும் கண்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது. தரமான படைப்புகளை படைப்பதே எனது நோக்கம். வாழ்த்துங்கள், வளர்கிறேன்!! உங்கள் விமர்சனங்கள் என்னை மேலும் வலுவூட்டும்.
மிக்க அன்புடன்
மகேஷ்வரன்