பல நாட்களாய் கனவு கண்டு உறங்கிக் கொண்டிருந்த எனது எண்ணங்களின் மாமழைதான் இந்த முதல் புத்தகம்.
இதனை எழுதுவதற்கு உத்வேகமாய் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
பள்ளி நாட்களில் எனது கவித் திறமையை இனம் கண்டு கடலூர் மாவட்ட அளவில் முதற்பரிசைப் பெறச் செய்த எனது தமிழ் ஆசிரியர் திரு.அமலதாஸ் அய்யா அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மேலும், இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரை வழங்கிய திரைப்பட இயக்குனர் திரு.அதிரூபன் அவர்களுக்கும், பாராட்டுரை வழங்கிய இலங்கை முகநூல் நண்பர் திரு. வன்னியூர் கிறுக்கன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
கவிதை வானில் சிறகை விரித்துப் பறக்கத் துடிக்கும் ஒரு சிறு பறவையின் முதல் சிறகசைப்புதான் இந்தப் படைப்பு.
அப்படி நான் பயணித்த தூரங்களில் சந்தித்த, சிந்தித்த, நிஜ மற்றும் நிகழ்வுகளின் கற்பனைத் தொகுப்புதான் இந்த மழையிடை மின்னல்கள்.
இந்த மின்னலின் வெளிச்சத்திலும் தமிழின் மழையிலும், கனமாய் ஒலிக்கும் இந்தப் புத்தகத்தில் சில நேரம் நனைந்துதான் பாருங்களேன்.
மூன்று பகுதிகளாக இந்த “மழையிடை மின்னல்கள்” புத்தகம் பிரித்து எழுதப்படுள்ளது.
1. தூறல்கள் - சிறுகவிதைகள், காதல் துணுக்குகள், ஹைக்கூ கவிதைகள் போன்றவைகள் யாவும் தூறல்களாகவும்,
2. அத்திக்கட்டி ஆலங்கட்டி - பலவரி கவிதைகள், அன்பு, காதல், வாழ்வியல் போன்றவை யாவும் அத்திகட்டி ஆலங்கட்டியாகவும்,
3. பேய் மழை - சமுதாயம், கோபம், நாட்டு நடப்பு போன்றவை யாவும் பேய் மழையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
-க. பரமகுரு
பரமகுரு கந்தசாமி தற்பொழுது பெங்களூரில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு நிபுணராக ( IT INFRASTRUCTURE MANAGEMENT SERVICE ANALYSTS) பணியாற்றி வருகிறார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், தமிழ் கவிதைகள், கதைகள், தன்னம்பிக்கை தொடர், எழுதும் ஆர்வம் கொண்டவர். எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பொறியாளர் பட்டம் பெற்றுள்ளார். சமீபத்தில் " மழையிடை மின்னல்கள்" எனும் கவிதை நூலை எழுதியுள்ளார்.
அமேசான் கின்டில்- லில் " இரண்டு நிமிட கதைகள்" எனும் தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் மேஜிக், GOOGLE BLOGS, மாணவர்களுக்கான தன்னம்பிக்கை சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை கல்லூரி மற்றும் அரசாங்க பள்ளிகளில் இலவசமாக செய்து வருகிறார்(THE MIRROR - HTTPS://THEMIRRORGROUPS.BLOGSPOT.COM). பள்ளிக் காலம் தொடங்கி கல்லூரி வரை 40க்கும் மேற்பட்ட மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கவிதை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அப்போதைய கடலூர் மாவட்ட COLLECTOR திரு.ககன்தீப்சிங்பேடி அவர்களிடம் பரிசுகளையும் பெற்றுள்ளார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் பட்டிமன்றம் பேச்சுப் போட்டிகள் என பல பரிசுகள் பெற்றுள்ளார். விஜய் டிவி நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சியான நீயா நானாவில் பங்கேற்று இருக்கிறார்.
Rent Now