பாறையில் பொருத்தப்பட்டிருக்கும் வாளை யார் எடுக்கிறார்களோ அவர்களால் தனக்கு மரணம் என்ற சாபத்தால் அச்சப்படும் வஞ்சக அரசன் அந்த வாளை பிடுங்குபவர்களே அடுத்த அரச வாரிசு என்று அறிவிக்கிறான்.அந்த வாளை உண்மையான வாரிசான இளவரசன் பிடுங்கி விடுகிறான்.அவனை சிறையில் அடைக்கும் போதுதான் வந்தது ஆதித்தன் என்ற கள்வன் என்ற உண்மை தெரிகிறது.ஆதித்தன் வஞ்சக அரசனை கொன்று உண்மையான இளவரசனை அரசனாக்கினானா என்பதே கதை.!
ஈரோடு கார்த்திக்காகிய நான் இதுவரை 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளை "ப்ரதிலிபி"தளத்தில் எழுதியிருக்கிறேன்.ஆதித்தன்,அரிஞ்சயன் என்ற இரண்டு சகோதரர்களை வைத்து லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஆங்கில தொடர் போல் எழுத முயற்சி செய்து 7 கதைகளை இதுவரை எழுதியுள்ளேன். மிஸ்ட்ரி, திகில், சஸ்பென்ஸ், க்ரைம் என பல ஜேனர்களில் எழுத முயற்சி செய்பவன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும் எளியவன் நான்.
Rent Now