கணவன் மனைவி உறவில் மிகவும் முக்கியமானது ஒருவர்மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை.
நம்பிக்கை சிதையும்போது நேசவலை அறுபடுகிறது. உணர்வுகளின் தீவிர சேதாரம் இருவருக்கும்..!
கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்..!
முகிலன்-மதுவந்தி..! திருமணம் முடிந்து சோபனமுகூர்த்தம் நிகழ்வதற்குள் கோபம், சந்தேகம் என்ற வலையில் வீழ்கிறாள் நம் நாயகி.
அவளது செய்கையால் மனம் நொந்து போகும் முகிலன் அதற்குப்பின், அவளைத் திரும்பியாவது பார்த்தானா? அல்லது சீண்டிச்சீண்டி அழவைத்து வேடிக்கைப் பார்த்தானா?
காதலுடன் ஆரம்பித்த உறவு, கட்டிலறையில் மோதலாய் மாறிப்போனதை கலாட்டாவாகச் சொல்லும் கதை.
மன்னிப்பின் முடிவில் ஏற்பட்ட பூரண சரணாகதி. அவளிடம் அவன்..! அவனிடம் அவள்..!
இவர்களுக்கு நடுவே ஆதர்ஸ தம்பதியான ராஜராஜன்-இந்திரபிரியா. கதையின் மற்றுமொரு கலக்கல் ஜோடி கார்த்திக்-சாகம்பரி.
பிடித்தது யார்? முகிலன்-மதுவந்தி ஜோடியா? கார்த்திக்-சாகம்பரி கதாபாத்திரங்களா?
உங்கள் பதிலை எதிர்ப்பார்த்து ஆவலுடன்..!
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now