அவன் பேசிக் கொண்டேயிருக்க, வெடவெடக்கும் உடலோடு மீண்டும் அவனை வெறித்துக் கொண்டிருந்தவளைக் காணப் பற்றிக்கொண்டு வந்தது.
ஆத்திரத்தின் உச்சத்தில் தன் குறுவாளை எடுத்து அவள் தொண்டைக் குழியில் வைத்து அழுத்தினான். ஆ..ஹா...பா...அ என்று ஒலிகள் மட்டுமே அவளிடமிருந்து எழும்பின.
தன் கிராமத்தாரைத் தவிர, வெளியுலகம் அறியாத மலைஜாதிப்பெண் மானு.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.
Rent Now