மௌனம் கூட ஒரு மொழிதான். அதை சம்மதத்துக்கு அறிகுறியாக சொல்லுவோம். கோபத்தை காட்ட மௌனத்தை கையாளுவோம், இப்படி பல விதங்களில் மௌனம் நமக்கு பயன்படும்.
கதையின் நாயகன் ரகுராம், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இழந்த தன் காதலை மீட்டு எடுக்கிறான்.
கதையின் நாயகி ஜான்வி ஸ்ரீ அதே இக்கட்டான சூழ்நிலையில் ரகுவின் வாழ்வில் வருகிறாள்.
இங்கே யாரின் மௌனத்தோடு யார் யுத்தம் செய்கிறார்கள் என்று கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இவர்களுடன் பரத் – ஹேமா, ஆதி – ஊர்மி ஜோடியும் வருகிறார்கள். இவர்களைப் பற்றியும் கதையின் ஓட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.
கல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது.
இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.
என் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். எனவே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.
புத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன்.
என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.
Ponitha
I'm from Malaysia how to buy infaa is mounm yutham ?
Sankarajith
Super
Maheswari
i want to read the book