Home / eBooks / Muganoolil Mugam Paarkirean
Muganoolil Mugam Paarkirean eBook Online

Muganoolil Mugam Paarkirean (முகநூலில் முகம் பார்க்கிறேன்)

About Muganoolil Mugam Paarkirean :

விளையாட்டாய் முகநூலில் எழுத ஆரம்பித்தபோது... வெட்டியாய் அதில் நேரம் கழிக்கிறேன் என்று சிறு உறுத்தல் இருந்தது. என் நலம் விரும்பிகள் பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.

என் பதிவுகள் (எதனால் என்றே தெரியவில்லை!!) பலருக்கும் பிடித்துப்போயின. லைக்குகள் ஷேர்கள் என்று வரவர ஒருவித நாட்டம் அதிகமாயிற்று.

சில சமயங்களில் வேலைகள் தடைப்பட்டதாலும்... இரவுகளில் கண்விழித்து முகநூலில் செலவழிப்பதாக உறுத்தல் ஏற்பட்டதாலும்... அடிக்கடி deactivate செய்ய ஆரம்பித்தேன்.

அது பலருக்கு மிகுந்த வருத்தமளித்தது.

ஒரு சமயத்தில் நம் புஸ்தகா டாட்காமில் என் நூல்கள் தொடர்ந்த வெளியாகும்போது அது தந்த உந்துதல்+ உற்சாகம்+ ஊக்குவிப்பு காரணமாக என் பதிவுகளில் தேர்ந்தெடுத்த சிலவற்றை நூலாகத் தொகுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவும்...

மிகுந்த ஆர்வத்துடன் யெஸ் சொன்னார் புஸ்தகா நிறுவன ராஜேஷ் தேவதாஸ்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்கள் முகநூலில் இருக்கிறீர்கள் என்றால் இது பற்றிய விமர்சனத்தை அங்கே எழுதலாம்.

எனக்கே எழுத நினைத்தீர்கள் என்றால் vedhagopalan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கும் எழுதலாம்.

மீண்டும் ராஜேஷ்ஜிக்கு நன்றி சொல்லி, நூல் தொகுப்புக்குள் உங்களை வரவேற்கும்

வேதா கோபாலன்

About Vedha Gopalan :

1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.

கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.

சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.

குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.

அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.

தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.

இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.

கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.

சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.

Rent Now
Write A Review

Rating And Reviews

  Muthulakshmi

Super

  Meena saravanan

Really good to read! My special is college life story and Amma appas story! Then Gopalan sir relationship and how she get married story is so nice! Thank you

Same Author Books