வொயில்ட் லைஃப் போட்டோகிராபி.. அது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என காடுகளில் சுற்றித் தனிச்சையாய் திரியும் ஹார்லி டேவிட்சன் பைக் பிரியை, நவீனகால மார்ட்டன் நாயகி பத்மஹாசினி மணிமேகலை பிரகதாம்பாள்.........தான், தன் குடும்பம், தன் ஜமீன் மக்கள் என்று ஊருக்காக வாழும் பழங்கால பாரம்பரிய ஜமீன் எண்ணங்களின் ஊறிய நாயகன் ரகுவீர தேவனாத மல்லிகார்ஜுன பூபதி......
ஒருவர் விருப்பத்தின் பேரிலும், ஒருவர் சூழ்நிலை கைதியாகவும் திருமணத்தை எதிர்கொள்ள இவர்களின் மண வாழ்க்கை இனித்ததா இல்லை கசந்ததா......யார் முரண், யார் அரண், எப்படி இணைந்தார்கள் என கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
விட்டுக் கொடுத்தார் கெட்டு போவதில்லை, கெட்டுப் போனவர் விட்டுக் கொடுத்ததில்லை என்பது உலக நியதி.......புரிதல் என்பது நட்பு, காதல், வாழ்க்கை என எல்லாவற்றிக்கும் பொருந்தும் என கூறும் அருமையான, அற்புதமான நிறைவான கதை......
ஸ்ரீலக்ஷ்மி என்கிற புனைப்பெயரில் பெயரில் இணைந்து எழுதுகின்றனர் லதா, உஷா சகோதரிகள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த இவர்களின் எழுத்துப்பணி, இன்றுவரை தடங்கலில்லாமல் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எல்லாம் வல்ல இறைவன் அருளால்.
சென்னையை சேர்ந்த இந்த சகோதரிகள் தற்போது வசிப்பது பெங்களூரூவிலும் பூனேயிலும்.
இதுவரை 22 நெடுங்கதைகளும், 13 குறுநாவல்களும் அச்சேறி, புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவர்களின் ஒவ்வொரு கதைக்களமும் புது விதம்! ஒவ்வொன்றும் ஒரு புதிய பார்வையில் புதிய வித்தியாசமான கோணத்தில் கதை பேசும். புதிய சிந்தனைகள், நல்ல கருத்துக்கள் படிப்பவர்களின் மனதை பண்படுத்தும் இவர்களின் கதைகள். அவ்வகையில், இவர்களின் புத்தகங்களைப் படித்திருப்பவர்கள் நிச்சயம் அதை உணர்ந்திருப்பார்கள். மனதை வருடும் மயிலிறகாய் இருக்கும் இவர்களின் படைப்புகள்
எழுத்துப்பணி ஆரம்பிப்பதற்கு முன், இவர்களும் நல்லதொரு வாசகிகள்தான். எழுத்தாளர்கள் என்ற அடையாளத்துடன் மட்டும் நில்லாமல் பதிப்பகத்துறையிலும், தரமான புத்தங்கங்களை ஸ்ரீபதிப்பகம் மூலம் பதிப்பித்து வழங்குகின்றனர். பல எழுத்தாளர்களை இந்த தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.
ஏற்கனவே இங்கே பலருடன் இவர்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், இங்கே உங்களுடன் மீண்டும் இணையதளம் மூலம் இணைய வந்துள்ளனர்.
Rent Now